You are currently viewing JANUARY 29,2021 – CURRENT AFFAIRS

JANUARY 29,2021 – CURRENT AFFAIRS

  • Ø  இந்திய செய்தித்தாள் தினம்

இந்தியாவில் முதன்முதலாக பெங்கால் கெசட் என்ற வார இதழ் வெளிவந்தது இதனை ஆங்கிலேயரான ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி என்பவர் 1780ஆம் ஆண்டு ஜனவரி 29-ஆம் தேதி வெளியிட்டார்.

            இப்பத்திரிகை கொல்கத்தாவிலிருந்து வெளிவந்தது.

  • Ø  இந்திய-வங்கதேச மாணவர்கள் செயற்கைக்கோள் தயாரிக்கும் திட்டம்:

இந்திய-வங்கதேச மாணவர்கள் இணைந்து புதிய செயற்கைகோளை உருவாக்குவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியா வங்கதேசம் இடையிலான 50 ஆண்டுகால நல்லுறவு மற்றும் 2021 மார்ச் 26 ஆம் தேதி கொண்டாவுள்ள வங்கதேசத்தின் 50 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக இரு நாடுகளை சேர்ந்த மாணவர்களின் கூட்டு முயற்சியில் செயற்கைக்கோள் தயாரித்து விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.இதற்கு “வங்கம்-பாரத் மாணவர் செயற்கைக்கோள்” என்று பெயரிடப்பட்டுள்ளது. ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா மற்றும் வங்கதேசத்தின் குளோபல் லா திங்கர்  சொசைட்டி நிறுவனம் இடையே இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் டெல்லியில் நடந்த இந்திய குடியரசு தின விழாவின் போது கையெழுத்தானது.

  • Ø  ரெப்கோ வங்கியின் நிர்வாக இயக்குனருக்கு சிறந்த பெண் தலைவருக்கான விருது:

தேசிய கூட்டுறவு வங்கிகளின் உச்சிமாநாடு ஜனவரி 22 மற்றும் 23ம் தேதிகளில் நடைபெற்றது.இதில் ரெப்கோ வங்கிக்கு 3 பிரிவுகளில் விருது வழங்கப்பட்டது.

அதன்படி ரெப்கோ வங்கி நிர்வாக இயக்குனர் ஆர்.எஸ் இசபெல்லா -வுக்கு சிறந்த பெண் தலைவருக்கான விருது கிடைத்துள்ளது. இது தவிர சிறந்த டிஜிட்டல் வங்கி மற்றும் மோசடிகளை கட்டுப்படுத்துவதற்கு சிறந்த முறையில் முன் முயற்சிகளை மேற்கொண்டது ஆகிய பிரிவுகளின்கீழ் மேலும் 2 விருதுகளை பெற்றுள்ளது.

  • Ø  இந்தியாவில் 2022 ஜனவரியில் மகளிர் ஆசிய கோப்பை கால்பந்து.

 

மகளிருக்கான ஆசிய கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் 2022 ஜனவரி 20 முதல் பிப்ரவரி 6 வரை நடைபெறும் என ஆசிய கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.

DAILY CURRENT AFFAIRS JAN 29,2021 | TNPSC | RRB | TNUSRB | SSC |