You are currently viewing JANUARY 27,2021 – CURRENT AFFAIRS

JANUARY 27,2021 – CURRENT AFFAIRS

Ø  சர்வதேச இனப்படுகொலை தினம் ஜனவரி 27

Theme : 2021 is “facing the aftermath: recovery and reconstitution after the holocaust”

இந்த ஆண்டு இனப்படுகொலையின் 76 ஆவது ஆண்டு நிறைவை குறிக்கிறது.

Ø  எஸ்டோனியா முதல் பெண் பிரதமர் பதவி ஏற்பு:

வட கிழக்கு ஐரோப்பிய நாடான எஸ்டோனியா பிரதமராக கஜா கலாஸ் பொறுப்பேற்றுக்கொண்டார். 43 வயதாகும் அவர்,  அந்த நாட்டின் முதல் பெண் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.

Ø  13,500 மரக்கன்று நட்ட சிறுமிக்கு பிரதமரின் ஆசிரியர் பால புரஸ்கார் விருது :

தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வரும் பிரசித்தி சிங் மரம் நடுவதில் ஆர்வம் கொண்டவர் இவர் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு திட்டமிட்டிருந்தார். இவரது பெற்றோர் மற்றும் ஆசிரியர் உதவியுடன் இதுவரை 13, 500 பழங்களை இவர் விதைத்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசு தின விழாவில் 18 வயதுக்குட்பட்ட சாதனையாளருக்கான பிரதமமந்திரி பால புரஸ்கார் விருதுக்கு பிரசித்தி சிங் தேர்வாகினார்.

Ø  குடியரசு தின அணிவகுப்பில் முதல் முறையாக இரண்டு பெண் பைலட்டுகள் பங்கேற்பு.

 

குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் நமது ராணுவ பலத்தை விளக்கும் வகையில் நடைபெற்ற அணிவகுப்பில் முதல் முறையாக விமானப்படையை சேர்ந்த பாவனா காந்த்,  சுவாதி ரத்தோர் ஆகிய இரண்டு பெண்கள் பங்கேற்று சாதனை படைத்துள்ளனர். 

Ø  பத்மஸ்ரீ விருது -கனகராஜ்

தெலுங்கானா மாநிலம்,  ஐதராபாத்தில் உள்ள குமரம் பீம்  அசிபாபாபத்  மாவட்டத்தின் பழங்குடி இனத்தை சேர்ந்த கனகராஜ் என்பவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் மயில் இறகுகளை கட்டிக் கொண்டு ஆடும் குஸ்ஸாடி எனும் பழங்குடியின நடனத்தில் புகழ் பெற்றவர்.

Ø  தமிழக அரசு குடியரசு தின விழா விருதுகள்:

அண்ணா பதக்கம்:

1.      ராணிப்பேட்டை மாவட்டம் புலி வலத்தை சேர்ந்த பா.முல்லை

2.      ஓசூர் வட்டத்துக்கு உள்பட்ட கால்நடை உதவி மருத்துவர் எ.பிரகாஷ்

3.      மதுரை திருமங்கலம் ரயில் வண்டி ஓட்டுநர் ஜெ.சுரேஷ்

4.      நீலகிரி மாவட்டம் முல்லிமலை கண்டியை சேர்ந்த ஆர்.புகழேந்திரன்

எரிவாயு வினை முன்கூட்டியே கண்டறிந்து மாணவர்களின் உயிர்களை காப்பாற்றுவதற்காக உதவி ஆசிரியை பா.முல்லைக்கும்,

கிணற்றில் விழுந்த யானைக்கு மயக்க மருந்து செலுத்தி பாதுகாப்பாக மீட்க உதவிய மருத்துவர் பிரகாஷ்-க்கும்

ரயில் தண்டவாளத்தில் பாறைகள் இருப்பதைப் பார்த்து உடனடியாக ரயிலை நிறுத்தி பயணிகளின் உயிரை காப்பாற்றிய ஓட்டுனர் சுரேஷுக்கும்,

காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த காவலரை துரிதமாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்ததாக புகழேந்திரனுக்கும் வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம் அளிக்கப்பட்டது.

மத நல்லிணக்கன விருது:

மத நல்லிணக்கத்தை போற்றிப் பாதுகாத்து வருவோருக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம் வழங்கப்படுகிறது. இந்த வருடம் கோவை மாவட்டத்தை சேர்ந்த கே.ஏ.அப்துல் ஜப்பார் கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது அளிக்கப்பட்டது.

சிறந்த காவல் நிலையம்:சேலம் நகர காவல் நிலைய முதல் இடம்

 

Ø  இந்திய பொருளாதாரம் நடப்பாண்டில் 7.3 சதவீத வளர்ச்சியை காணும் என ஐ.நா தெரிவித்துள்ளது.

2019 இல் இந்தியா 4.7 சதவீத பொருளாதார வளர்ச்சியை பெற்றிருந்தது. 2020 இல் 9.6 சதவீதமாக இந்திய பொருளாதாரம் பின்னடைவை சந்திக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Ø  சர்வதேச நிதியத்தின் கணிப்பு

 

கரோனா இடர்பாடுகளும் நடப்பாண்டில் இந்திய பொருளாதாரம் 11.5 சதவீதம் என்ற இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டும் என சர்வதேச நிதியத்தின் கணிப்பு தெரிவிக்கிறது உலக அளவில் 2021 இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்டுவது இந்தியாவில் மட்டுமே சாத்தியமாகும் என தெரிவித்துள்ளது.

DAILY CURRENT AFFAIRS JAN 27,2021 | TNPSC | RRB | TNUSRB | SSC |