You are currently viewing JANUARY 26,2021 – CURRENT AFFAIRS

JANUARY 26,2021 – CURRENT AFFAIRS

Ø  ஐ.நா உயர்நிலை பொருளாதார ஆலோசனைக் குழுவில் ஜெயதி கோஷ்

ஐ.நா அமைப்பின் உயர்நிலை சமூக பொருளாதார ஆலோசனைக் குழுவில் இந்தியாவை சேர்ந்த பொருளாதார நிபுணர் ஜெயதி கோஷ் நியமிக்கப்பட்டுள்ளார். அவரைத்தவிர 19 சர்வதேச பொருளாதார நிபுணர்களும் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

Ø  2021 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள்

இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகளை மத்திய அரசு ஜனவரி, 25 அன்று அறிவித்துள்ளது.

கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல் தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 119 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பத்மவிபூஷன் விருது பெற்றவர்கள்

1.      ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே

2.      மறைந்த பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம்

3.      மறைந்த நரேந்திர சிங் கபானி

4.      மௌலானா வஹிதுதீன் கான்

5.      பெல்லே மொனப்பா ஹெக்டே

6.      பிபி லால்

7.      சுதர்சன் சாஹு

பத்மபூஷன் விருதுக்காண பட்டியலில் இடம்பிடித்து உள்ளவர்கள்

1.      கிருஷ்ணன் நாயர் சாந்தகுமாரி சித்ரா

2.      அஸ்ஸாம்முன்னாள் முதல்வர் தருண் கோகாய்

3.      சந்திரசேகர் கம்பரா

4.      சுமித்ரா மகாஜன்

5.      நிபேந்திரா மிஸ்ரா

6.      முன்னாள் அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்

7.      மறைந்த கேசுபாய் பட்டேல்

8.      மறைந்த கல்பே சாதிக்

9.      ரஜினிகாந்த் தேவிதாஸ்

10. தர்லோசன் சிங்

  பத்மஸ்ரீ விருதுகள் மொத்தம் 102 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன

பத்மஸ்ரீ விருது பட்டியலில் இடம் பிடித்துள்ள தமிழகத்தை சேர்ந்தவர்கள் பட்டியல்

1.      பி அனிதா -விளையாட்டு

2.      சுப்பு ஆறுமுகம் -கலை

3.      சாலமன் பாப்பையா -இலக்கியம்- கல்வி

4.      பாப்பம்மாள் – விவசாயம்

5.      பாம்பே ஜெயஸ்ரீ ராம்நாத்-கலை

6.      கே.சி சிவசங்கர்-கலை 7.மராச்சி சுப்புராமன்-சமூகப்பணி

7.      பி.சுப்ரமணியன்- வர்த்தகம் மற்றும் தொழில்

8.      திருவேங்கடம் வீரராகவன் -மருத்துவம்

9.      ஸ்ரீதர் வேம்பு -வர்த்தகம் மற்றும் தொழில்

 

10. புதுச்சேரி கேசவ சாமி -கலை

Ø  2020 ஆம் ஆண்டுக்கான குடியரசுத் தலைவரின் வீரதீர பதக்கம்

மீட்பு பணியின் போது உயிரிழந்த தமிழக தீயணைப்பு வீரர்  ராஜ்குமாருக்கு குடியரசுத் தலைவரின் வீர வீர பதக்கம் வழங்கப்பட்டது.

Ø  பால சக்தி புரஸ்கார் விருது

கல்வி கலை விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்த குழந்தைகளுக்கு ஆண்டு தோறும் பால சக்தி புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு பால புரஸ்கார் விருதுக்கு நாடு முழுவதிலும் இருந்து 32 குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டனர்.

Ø  தமிழக வீராங்கனை அனிதா உள்பட 7 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்

பி.அனிதா: சென்னையை சேர்ந்த அனிதா தேசிய மகளிர் கூடைப்பந்து அணியில் 18 ஆண்டுகளாக விளையாடியவர்.

மௌமா தாஸ்:காமன்வெல்த் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் டேபிள் டென்னிஸில் பல்வேறு பதக்கங்கள் வென்றவர். டேபிள் டென்னிஸில் சரத் கமலுக்கு பிறகு பத்மஸ்ரீ விருது வெல்லும் முதல் நபர்

 

சுதா சிங் : 3000 மீட்டர் ஸ்டிபிள் சேஸ் பந்தயத்தில் தேசிய சாதனையாளர்.

மாதவன் நம்பியார்: தடகள வீராங்கனை பி.டி உஷாவுக்கு பயிற்சியாளராக இருந்தவர் மாதவன்.

வீரேந்தர் சிங்: மல்யுத்த வீரர்

கே.ஒய். வெங்கடேஷ் : மாற்றுத்திறனாளி தடகள வீரர்

 

அன்ஷு ஜெம் செண்பா : மலையேற்ற வீராங்கனையான அன்ஷு ஒரே சீசனில் இரு முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய உலகின் ஒரே வீராங்கனை என்ற சாதனைக்கு சொந்தக்காரர். 

Ø  இந்திய கிரிக்கெட் வீரரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான வாஷிங்டன் சுந்தர் பெருநகர சென்னை மாநகராட்சி தேர்தல் விழிப்புணர்வு தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Ø  ஒரே நேரத்தில் 143 செயற்கைக்கோளை ஏவி உலக சாதனை படைத்தது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்:

 

ஒரே நேரத்தில் 143 செயற்கைக்கோள்களை ஏவிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் புதிய உலக சாதனை படைத்துள்ளது. விண்வெளி தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனமான அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது பால்கன் -9 ராக்கெட் மூலம் ஒரே நேரத்தில் 143 செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இஸ்ரோ நிறுவனம் 2017 ஆம் ஆண்டு 104 செயற்கை கோள்களை ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

DAILY CURRENT AFFAIRS JAN 26,2021 | TNPSC | RRB | TNUSRB | SSC |