- உத்தரகண்டின் ஒருநாள் முதல்வர்
தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி உத்தரகண்டில் ஒருநாள் முதல்வராக கல்லூரி மாணவி சிருஷ்டி கோஸ்வாமி செயல்பட்டார்.
- ரயில் ஓட்டுநருக்கு “அண்ணா” விருது
தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் வீர தீர செயல் புரிந்தவர்களுக்கு “அண்ணா” விருதுடன் ரூபாய் ஒரு லட்சம் காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது இந்த ஆண்டு அண்ணா விருது பெற இருப்பவர் ரயில் ஓட்டுனர் சுரேஷ்.
சென்னை எழும்பூர்- மதுரை இடையிலான விரைவு ரயிலை (வைகை) சுரேஷ் ஒட்டிச் சென்றார். அப்போது கொடைரோடு – அம்பாத்துரை இடையே நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பாறைகள் உருண்டு தண்டவாளத்தில் விழுந்த அந்த நேரத்தில் அவர் சாதுர்யமாக செயல்பட்டு ரயிலை நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த வீர தீர செயலுக்கு அவருக்கு “அண்ணா ” விருது வழங்கப்படுகிறது
- ஜனவரி 25 : தேசிய வாக்காளர் தினம்
இந்தியாவின் தேர்தல் ஆணையம் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதியன்று அமைக்கப்பட்டது.
கடந்த 2011ம் ஆண்டு முதல் தேசிய வாக்காளர் தினம் கொண்டாட ஒப்புதல் அளிக்கப்பட்டு அந்த தினம் ஒவ்வொரு மாநிலத்திலும் விழாவாக கொண்டாடப்படுகிறது.
இதன்படி இந்தியாவின் 11 ஆவது தேசிய வாக்காளர் தினம் ஜனவரி 25 அன்று கொண்டாடப்பட்டது.
- ஜனவரி 29 ல் ஓய்வு பெறுகிறார் தலைமை செயலாளர் சண்முகம்
தமிழக அரசின் 46-வது தலைமை செயலாளராக க.சண்முகம் அவர்கள் 2019ஆம் ஆண்டு ஜூன் 29-ஆம் தேதி நியமிக்கப்பட்டார். அவருடைய பதவிக்காலம் ஜனவரி 29, 2021 ல் நிறைவடைகிறது.
- ஜனவரி 24 : தேசிய பெண் குழந்தைகள் தினம்
கடந்த 2008 ம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது.
JANUARY 25,2021 – CURRENT AFFAIRS PLAYLIST VIDEO CLASS WITH EXPLANATION