You are currently viewing JANUARY 23,2021-CURRENT AFFAIRS
DAILY CURRENT AFFAIRS JAN 23,2021 TNPSC RRB TNUSRB SSC

JANUARY 23,2021-CURRENT AFFAIRS

  • கீழடி, மணலூர், கொந்தகை அகரம் பகுதிகளில் ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கப்பட இருக்கின்றன.

சிவகங்கை மாவட்டம் கீழடி பள்ளிச்சந்தை திடலில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் கட்ட பணிகள் தொடங்கின. இதுவரை 6 கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. முதல் 3 கட்ட அகழாய்வுப் பணிகளை இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையும்  4 முதல் 6 கட்ட அகழாய்வுப் பணிகளை தமிழக தொல்லியல் துறையும் மேற்கொண்டது. இப்பொழுது சிவகங்கை மாவட்டம் கீழடி, மணலூர்,  கொந்தகை,  அகரம் ஆகிய பகுதிகளில் 7ம் கட்ட அகழாய்வுப் பணிகள் பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கப்பட இருக்கின்றன.

 

  • ஜனவரி 23 -தேசியவலிமை தினம்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்த நாளிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 23ஆம் தேதி தேசிய வலிமை தினமாக கொண்டாடப்படும்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 1897 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23ஆம் நாளில் ஒடிசா மாநிலத்தில் உள்ள கட்டக் என்ற ஊரில் பிறந்தார்.

“இந்தியாவில் உள்ள மிக மிக ஆபத்தான எட்டு பேரில் போசும் ஒருவர்”என குறிப்பிட்டவர் இங்கிலாந்து சிறை கமிஷனராக பணியாற்றிய பாட்டர்சன்

1938 பிப்ரவரி 19 ஹரிபுராவில் நடந்த 51வது காங்கிரஸுக்கு போஸ் தன் 41வது வயதில் தலைவராக அமர்ந்தார். அடுத்த ஆண்டு 52-வது காங்கிரஸின் தலைவர் பதவிக்கு போசுக்கும் பட்டாபி சீதாராமையாவுக்கும் போட்டி. 29.01.1939 அன்று நடந்த தலைவர் தேர்தலில் போஸ் 1,580 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் அவரை எதிர்த்த பட்டாபி சீதாராமையா 1377 வாக்குகளை பெற்றார். பட்டாபி சீதாராமையாவின் தோல்வி என் தோல்வி என்று காந்திஜி கூறினார்

            சிங்கப்பூரில் 21.10.1943 அன்று “ஆசாத் ஹிந்த்” சர்க்காரை நிறுவினார்.

“டெல்லி சலோ” “ஜெய்ஹிந்த்”என்ற பொது முழக்கத்தை தோற்றுவித்தவர் போஸ்

 ஜனவரி 24 – தேசிய பெண் குழந்தைகள் தினம்

 

 டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்கும் தமிழக அலங்கார ஊர்தி மாமல்லபுரம் சிற்பக் கலையை பறைசாற்றுகிறது

தில்லியில் 26-ஆம் தேதி நடைபெறும் 71வது குடியரசு தின அணிவகுப்பில் மாமல்லபுரத்தின் சிற்பக்கலையை தத்ரூபமாக காட்டும் தமிழக அரசின் அலங்கார ஊர்தி இடம் பெறுகிறது.

 

  • தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவராக சரஸ்வதி ரங்கசாமி நியமனம்.

மேலும் ஆறு உறுப்பினர்களையும் புதிதாக நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் 2013ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் மற்றும் போக்ஸோ சட்டத்தை அமல்படுத்துவதை கண்காணிக்கும் பொறுப்பு இந்த ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் தலைவராக இருந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி நிர்மலா ஜனவரி 8ஆம் தேதியுடன் ஓய்வு பெற்றார். இப்பொழுது ஆணையத் தலைவராக சரஸ்வதி ரங்கசாமி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இவர் ஏற்கனவே இப்பதவியில் 2013 முதல் 2016 ஆம் ஆண்டு வரை இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

DAILY CURRENT AFFAIRS JAN 23,2021 | TNPSC | RRB | TNUSRB | SSC |