- தமிழக சட்டப்பேரவை பிப்ரவரி இரண்டாம் தேதி கூடுகிறது
பிப்ரவரி 2ஆம் தேதியன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்ற உள்ளார்.
- முதல்நாளில் அதிபர் ஜோ பைடன்
ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்றுக்கொண்டார்.துணை அதிபராக இந்திய வம்சாவழியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்ற முதல் நாளில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைவதற்கான அரசாணையில் அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டார்.
கரோனா பிரச்சனையில் உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு சாதகமாக நடந்து கொள்வதாக குற்றம்சாட்டி அதற்கு பதிலடியாக அந்த அமைப்புக்கு வழங்கிய நிதியுதவி ரத்து செய்து அந்த அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகுவதாக டிரம்ப் அறிவித்தார். தற்போது உலக சுகாதார அமைப்பில் மீண்டும் இணைவதற்கான அரசாணையில் ஜோ பைடன் கையெழுத்திட்டு நிதி மீண்டும் வழங்க ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
- ஒரு லட்சம் பழங்குடியினருக்கு பட்டா வழங்கும் திட்டம்: அஸ்ஸாம்
- அமெரிக்க அதிபரின் உரையை தயாரித்த இந்திய வம்சாவளி இளைஞர்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதவியேற்பு உரையை இந்திய வம்சாவளியை சேர்ந்த இளைஞர் வினய் ரெட்டி தயாரித்தார்.இவர் தெலுங்கானா மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஐ.நா தலைவராக மீண்டும் குட்டெரஸ்- சீனா ஆதரவு
ஐ.நா அமைப்பின் பொதுச்செயலர் பதவியில் இரண்டாவது முறையாக அன்டோனியா குட்டெரஸ் பதவி வகிப்பதற்கு சீனா ஆதரவு அளித்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஐ.நா பொதுச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் குட்டெரசின் பதவிக்காலம் வரும் 2021 டிசம்பர் 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
- ஹீரோ மோட்டோகார்ப் இருசக்கர வாகன தயாரிப்பு 10 கோடியை தாண்டியது.
இருசக்கர வாகன தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னிலையில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாகன தயாரிப்பு 10 கோடி மைல் கல்லை தாண்டி உள்ளது.
JANUARY 22,2021 – CURRENT AFFAIRS PLAYLIST VIDEO CLASS WITH EXPLANATION
