DAILY CURRENT AFFAIRS JAN 21,2021 TNPSC RRB TNUSRB SSC
JANUARY 21,2021-CURRENT AFFAIRS
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடனும் முதல் பெண் துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிசும் ஜனவரி 20 அன்று பொறுப்பேற்றுக்கொண்டனர்.
புதிய கண்டுபிடிப்புகளுக்கான நிதி ஆயோக் குறியீடு -மூன்றாம் இடத்தில் தமிழகம்
மாநிலங்கள் இடையே புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆரோக்கியமான போட்டியை ஏற்படுத்தும் முயற்சியாக சர்வதேச புதிய கண்டுபிடிப்பு குறியீடுகளின் அடிப்படையில் தேசிய புதிய கண்டுபிடிப்பு குறித்த பட்டியலை நிதி ஆயோக் வெளியிட்டு வருகிறது 36 வகையான அலகுகளின் அடிப்படையில் இந்த குறியீடு பட்டியல் தயார் செய்யப்படுகிறது.
கர்நாடகம் -முதலிடம்
மகாராஷ்டிரா -இரண்டாமிடம்
தமிழகம் -மூன்றாமிடம்
தெலுங்கானா -நான்காமிடம்
கேரளா -ஐந்தாமிடம்
டிராகன் பழத்தின் பெயர் கமலம் என மாற்ற குஜராத் அரசு முடிவு.
குரு கோவிந்த் சிங் பிறந்த தினம்(JAN 20)
சீக்கிய மதத்தின் பத்தாவது குருவான குரு கோவிந்த் சிங் 354 ஆவது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.
தமிழக வாக்காளர்கள் எண்ணிக்கை 6.26 கோடியாக அதிகரிப்பு.
தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446.
3 கோடியே 8 லட்சத்து 38 ஆயிரத்து 473 ஆண்களும்
3 கோடியே 18 லட்சத்து 28 ஆயிரத்து 727 பெண்களும் உள்ளனர்.
மூன்றாம் பாலினத்தவர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 246 ஆக உள்ளது.
தமிழகத்தில் அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதி செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி
குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதி சென்னை துறைமுகம் தொகுதி.