- அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்கிறார். அவருடன் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராக பொறுப்பேற்கிறார்.
நவம்பர் 3ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் போட்டியிட்டனர் அந்த தேர்தலில் 306 மக்கள் பிரதிநிதிகளின் வாக்குகளைப் பெற்று ஜோ பைடன் வெற்றி பெற்றார்.
- நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29ஆம் தேதி தொடங்குகிறது.
பிப்ரவரி 1ஆம் தேதி 2021-2022 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த கூட்டத்தொடர் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக ஜனவரி 29-ஆம் தேதி முதல் பிப்ரவரி 15ஆம் தேதி வரையும் இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் 8ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஜனவரி 29ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்.
- நேதாஜி பிறந்த தினம் தேசிய வலிமை தினமாக கடைபிடிக்கப்படும்- மத்திய அரசு அறிவிப்பு
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த தினமான ஜனவரி 23ஆம் தேதி ஆண்டுதோறும் தேசிய வலிமை தினமாக கடைபிடிக்கப்படும். இந்த ஆண்டு அவரின் 125-வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டவுள்ளது.இதையடுத்து அவரின் பிறந்த தினத்தன்று மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் முதலாவது வலிமை தின நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
நேதாஜி அவர்களின் 125வது பிறந்த தினத்தை ஆண்டு முழுவதும் கொண்டாடும் வகையில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இதற்காக பிரதமர் மோடி தலைமையில் 85 பேர் கொண்ட உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
- சீன தடுப்பூசிக்கு பாகிஸ்தான் அனுமதி
சீனாவின் சைனோபார்ம் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்துவதற்கு பாகிஸ்தான் மருந்துகள் ஒழுங்கமைப்பு அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகமும் ஆஸ்ட்ரோ ஜெனகா நிறுவனமும் இணைந்து உருவாக்கிய தடுப்பூசியை பயன்படுத்த அந்த அமைப்பு அனுமதி அளித்துள்ளது.
JANUARY 20,2021 – CURRENT AFFAIRS PLAYLIST VIDEO CLASS WITH EXPLANATION
