You are currently viewing JANUARY 18,2021-CURRENT AFFAIRS
DAILY CURRENT AFFAIRS JAN 18,2021 TNPSC RRB TNUSRB SSC

JANUARY 18,2021-CURRENT AFFAIRS

  • இந்த ஆண்டு 32வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம்

ஜனவரி 18 முதல் பிப்ரவரி 17 வரை ஒரு மாத காலம் “சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு “என்ற கருப்பொருளை மையப்படுத்தி கடைபிடிக்கப்படுகிறது.

  • ஜி 7 மாநாடு பிரதமர் மோடிக்கு போரிஸ் ஜான்சன் அழைப்பு.

அமெரிக்கா,பிரிட்டன், கனடா,  பிரான்ஸ்,  ஜெர்மனி, இத்தாலி,  ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஜி7 அமைப்பின் மாநாடானது வரும் ஜூன் மாதம் 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை பிரிட்டனின் கடற்கரை நகரான கார்ன்வாலில் நடைபெற உள்ளது.

அந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்குமாறு இந்தியா,  தென்கொரியா, ஆஸ்திரேலியா நாடுகளுக்கு பிரிட்டன் அழைப்பு விடுத்திருக்கிறது.

நடப்பாண்டில் ஜி-7 மாநாட்டை பிரிட்டன் நடத்துகிறது.

2021 ஆம் ஆண்டில் பிரிக்ஸ் அமைப்பின் தலைமைப்பொறுப்பை இந்தியா ஏற்க  உள்ளது.

2023 ம் ஆண்டில் ஜி20 அமைப்பின் தலைமைப்பொறுப்பை இந்தியா ஏற்க உள்ளது.

  • சுதந்திர இந்தியாவின் முதல் வேட்பாளர் சியாம் சரண் நெகி இமாச்சல பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் மீண்டும் வாக்களித்தார்.

1951-1952 ஆம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலில் வாக்குச்சாவடி கின்னோரில் முதல் நபராக வாக்களித்த ஷியாம் சரண் நேகி  மீண்டும் ஹிமாச்சல் உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்தார்.

  • கொச்சி விமான நிலைய பயன்பாட்டுக்காக மிதக்கும் சூரிய மின் தகடுகள் மூலம் மின் உற்பத்தி.

உலகளவில் முற்றிலும் சூரிய மின்சக்தி மூலம் இயங்கும் முதல் விமான நிலையம் கேரள மாநிலம் கொச்சி சர்வதேச விமான நிலையம்.

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் இந்த விமான நிலையத்தின் மின்சாரத் தேவைகள் முழுவதும் சூரிய மின்சக்தி மூலம் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

  • ஜோ பைடன் நிர்வாகத்தில் 20 இந்திய அமெரிக்கர்கள்

அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக ஜோ பைடன் வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்க உள்ளார் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்கிறார்.

துணை அதிபராக பொறுப்பேற்க உள்ள முதல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்  மற்றும் முதல் ஆப்பிரிக்க அமெரிக்கர் என்ற பெருமையையும் கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார் கமலஹாரிசுக்கு உச்சநீதிமன்ற நீதிபதியான சோனியா சோட்டோ மேயர் பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளார்

முக்கிய நியமனங்கள்

  1. நீரா தாண்டன்- வெள்ளை மாளிகை அலுவலகத்தின் நிர்வாகம் மற்றும் நிதிநிலை இயக்குனர்
  2. விவேக் மூர்த்தி -அமெரிக்க சர்ஜன் ஜெனரல்
  3. வனிதா குப்தா- நீதித்துறை உதவி அட்டார்னி  ஜெனரல்
  4. உஸ்ரா ஷெயா- குடிமக்கள் பாதுகாப்பு,  ஜனநாயகம்,  மனித உரிமைகளுக்கான துணை செயலர்
  5. மாலா அடிகா- அமெரிக்காவின் முதல் பெண்மணியான தில் பைனின் கொள்கை இயக்குனர்
  6. கரிமா வெரிமா- ஜில் பைடன் அலுவலகத்தின் டிஜிட்டல் இயக்குனர்
  7. சப்ரினா சிங் -வெள்ளை மாளிகை துணை ஊடக செயலர்

JANUARY 18,2021 – CURRENT AFFAIRS PLAYLIST VIDEO CLASS WITH EXPLANATION

DAILY CURRENT AFFAIRS JAN 18,2021 TNPSC RRB TNUSRB SSC