- நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஜனவரி 16ஆம் தேதி தொடங்கி வைக்கப்படுகிறது.
உள்நாட்டு தயாரிப்பான பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ள கோவேக்ஸின் தடுப்பூசியும் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கோவிஷில்டு தடுப்பூசியும் செலுத்தப்பட உள்ளன.
கொரொனோ தடுப்பூசி எடுத்துக் கொள்ள விரும்புவோர் மற்றும் செலுத்தி கொண்டவர்களின் விவரங்கள் பற்றிய பதிவுகள் கோவின் செயலி மூலம் கண்காணிக்கப்படுகின்றன.
- நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 29ல் தொடங்குகிறது.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இரு கட்டங்களாக நடைபெறுகிறது.முதல் கட்டமாக ஜனவரி 29-ஆம் தேதி முதல் பிப்ரவரி 15ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்.இரண்டாம் கட்டமாக பட்ஜெட் கூட்டத் தொடரானது மார்ச் 8ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
ஜனவரி 29ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்.
பிப்ரவரி 1 இல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது
- 2021 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினர் இல்லை வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு.
வரும் ஜனவரி 26ஆம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின விழா நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக பங்கேற்கும்படி பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில் பிரிட்டனில் புதிய வகை கொரோனா பரவிவரும் காரணமாக போரிஸ் ஜான்சன் தனது இந்திய பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்தார். இதையடுத்து இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக வெளிநாட்டுத் தலைவர் எவரும் பங்கேற்கவில்லை என்று வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி மரணத்திற்குப் பின் 1966ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் தலைமை விருந்தினராக யாரும் பங்கேற்கவில்லை.
- ஒரே தொடரில் மூன்று விதமான ஆட்டங்களிலும் அறிமுகமான முதல் இந்தியர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் டி.நடராஜன் பெற்றுள்ளார்
- ஜனவரி 15 திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது.
JANUARY 16,2021 – CURRENT AFFAIRS PLAYLIST VIDEO CLASS WITH EXPLANATION
