- ரூபாய் 45, 696 கோடியில் 83 தேஜஸ் போர் விமானங்கள் மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பெங்களூரு ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடமிருந்து 83 இலகு ரக போர் விமானங்களை கொள்முதல் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- சி.பா.ஆதித்தனார் விருது தமிழக அரசு அறிவிப்பு
- தமிழர் தந்தை சி.பா ஆதித்தனார் நாளிதழ் விருது- தினமணி நாளிதழ்
- சி.பா ஆதித்தனார் வார இதழ் விருது-கல்கி வார இதழ்
- சி.பா ஆதித்தனார் திங்களிதழ் விருது -செந்தமிழ் திங்களிதழ்
- தேவநேயப்பாவாணர் விருது-முனைவர் கு. சிவமணி
- வீரமாமுனிவர் விருது – ஹாங்காங்கை சேர்ந்த முனைவர் கிரிகோரி ஜேம்ஸ்
- 2019 ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருது- சே.ராஜாராமன்
- மதுரை உலகத் தமிழ்ச் சங்க விருதுகள்
2020ஆம் ஆண்டுக்கான
- இலக்கிய விருது- பிரான்ஸ் நாட்டை சேர்ந்த முனைவர் தேவராசு
- இலக்கண விருது – இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர் அருணாசலம் சண்முகதாஸ்
- மொழியியல் விருது- சிங்கப்பூரை சேர்ந்த முனைவர் சுப.திண்ணப்பன்
- 2020 ஆம் ஆண்டுக்கான தமிழ் செம்மல் விருதுகள்
தமிழக அரசின் சார்பில் 2020ஆம் ஆண்டுக்கான தமிழ் செம்மல் விருது பெறுவோர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் வளர்ச்சிக்காக தொண்டு செய்து வருவோர், தமிழ் அமைப்பை ஏற்படுத்தி மொழிக்காக பாடுபடும் ஆர்வலர்களை பெருமைப்படுத்தும் வகையில் தமிழ் செம்மல் விருதுகள் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
- திருவள்ளுவர் திருநாள் -சித்திரை தமிழ் புத்தாண்டு விருதுகள் அறிவிப்பு
- 2021 ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது -முனைவர் வைகைச்செல்வன்
- 2020 ஆம் ஆண்டுக்கான தந்தைபெரியார் விருது -தமிழ் மகன் உசேன்
- அண்ணல் அம்பேத்கர் விருது- வரகூர் அருணாச்சலம்
- பேரறிஞர் அண்ணா விருது -கடம்பூர் ஜனார்த்தனன்
- பெருந்தலைவர் காமராஜர் விருது- முனைவர் ச.தேவராஜ்
- மகாகவி பாரதியார் விருது -கவிஞர் பூவை செங்குட்டுவன்
- பாவேந்தர் பாரதிதாசன் விருது-கவிஞர் அறிவுமதி என்கிற மதியழகன்
- தமிழ் தென்றல் திரு வி க விருது -எழுத்தாளர் வி என் சாமி
- முத்தமிழ் காவலர் கி ஆ பெ விசுவநாதம் விருது- முனைவர் வீ.சேதுராமலிங்கம்
- 2020 ஆம் ஆண்டுக்கான தமிழ்த்தாய் விருது- விஜிபி உலக தமிழ் சங்கம்
- கபிலர் விருது- பேராசிரியர் ஏழுமலை
- உ வே சா விருது -எழுத்தாளர் கி ராஜநாராயணன்
- கம்பர் விருது -மருத்துவர் எச்.வி ஹண்டே
- சொல்லின் செல்வர் விருது -ஆன்மிக சொற்பொழிவாளர் நாகை.முகுந்தன்
- உமறுப்புலவர் விருது -ம. அ. சையத் என்ற பாரிதாசன்
- ஜி. யு போப் விருது – ஜெர்மனியை சேர்ந்த தமிழ்ப் பேராசிரியர் உல்ரிகே நிகோலசு
- இளங்கோவடிகள் விருது -பேராசிரியர் வைத்தியலிங்கன்
- அம்மா இலக்கிய விருது- பேராசிரியர் மகாலட்சுமி
- சிந்தனை சிற்பி சிங்காரவேலர் விருது- எழுத்தாளர் அழகேசன்
- மறைமலை அடிகளார் விருது – மறை. தி. தாயுமானவன்
- அயோத்திதாச பண்டிதர் விருது -முனைவர் கோ.ப.செல்லம்மாள்
- அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் விருது -முனைவர் ஊரன் அடிகள்
- காரைக்கால் அம்மையார் விருது- முனைவர் மோ.ஞானப்பூங்கோதை
- கொரோனாவுக்கு மூச்சு வழி மருந்து
மூச்சு வழியாக மருந்தை செலுத்தி, கரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் புதிய முறை பிரிட்டன் மருத்துவமனைகளில் சோதனை முறையில் தொடக்கப்பட்டது. இன்டர்பெரான் பீட்டா -1ஏ என்ற புரதத்தை மூச்சு வழியாக கரோனா நோயாளிகளுக்கு செலுத்தும் சிகிச்சை முறையை பிரிட்டன் மருத்துவமனையில் சோதனை முறையில் தொடங்கியுள்ளன.
JANUARY 14,2021 – CURRENT AFFAIRS PLAYLIST VIDEO CLASS WITH EXPLANATION
