- காகிதமில்லா பட்ஜெட் மத்திய அரசு முடிவு
கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நிகழாண்டு பட்ஜெட் ஆவணங்களை காகிதத்தில் அச்சடிக்காமல் கூட்டத்தொடரின் போது எம்.பி க்களுக்கு மின்னணு பிரதிகளாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி 2021-2022 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் எட்டாவது பட்ஜெட் ஆகும். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மூன்றாவது முறையாக முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
- ட்ரம்ப் பதவி நீக்க நடவடிக்கைகள் தொடக்கம் -தீர்மானம் தாக்கல் செய்கிறார் நான்சி பெலோசி
அமெரிக்காவின் 25 ஆவது சட்டத் திருத்தத்தின்படி அதிபர் பதவியில் இருந்து ட்ரம்பை நீக்க பிரதிநிதிகள் சபையின் தலைவர் நான்சி பெலோசி நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளார்.
- பெண் ஊழியர்களால் நீண்ட தொலைவு விமானத்தை இயக்கி ஏர் இந்தியா சாதனை
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ- இந்தியாவின் பெங்களூர்- இந்த இரு இடங்களுக்கு இடைப்பட்ட 13, 993 கிலோ மீட்டர் தொலைவை 13.5 மணி நேரத்தில் பெண் ஊழியர்களை கொண்டு விமானத்தை இயக்கி ஏர் இந்தியா சாதனை படைத்துள்ளது.அந்த விமானத்தின் விமானிகள்
- ஸோயா அகர்வால்
- பாபாகரி தன்மய்
- அகன்ஷா சோனாவரே
- ஷிவானி மன்ஹாஸ்
- ஒரே கரோனா தடுப்பூசியில் நோய் எதிர்ப்பு திறன்
அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் நானோ துகள் கரோனா தடுப்பூசியை கண்டறிந்துள்ளனர்.
கரோனா தீநுண்மியின் ஸ்பைக் புரதத்தின் அடிப்பகுதியில் ஒரு பகுதியை அகற்றி அதை ஃபெரிட்டின் என்ற இரும்புச்சத்து போராட்டத்துடன் இணைத்து இந்த புதிய தடுப்பூசியை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
- மரப் பொருள்களால் செயற்கைக்கோள்
வரும் காலங்களில் விண்வெளி குப்பைகளை குறைக்க ஜப்பானை சேர்ந்த சுமிட்டோமோ ஃபாரஸ்ட்ரி என்ற நிறுவனமும் கியோட்டோ பல்கலைக்கழகமும் இணைந்து மரப்பொருள்களால் செயற்கைக்கோளை உருவாக்கும் ஆய்வை தொடங்கியுள்ளன.2023-ம் ஆண்டுக்குள் மரப்பொருளான செயற்கைக்கோளை உருவாக்குவதே இந்த ஆய்வின் இலக்கு.
JANUARY 12,2021 – CURRENT AFFAIRS PLAYLIST VIDEO CLASS WITH EXPLANATION
