DAILY CURRENT AFFAIRS JAN 11,2021 TNPSC RRB TNUSRB SSC
JANUARY 11,2021-CURRENT AFFAIRS
ஏப்ரல்-மே 2021ல் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்
தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், அசாம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் வரும் ஏப்ரல் மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும்.
கல்லூரி மாணவர்களுக்கு 2 ஜிபி இலவச இணைய இணைப்பு அட்டைகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் 9.69 லட்சம் மாணவர்களுக்கு ஏப்ரல் வரை தினசரி 2 ஜிபி இலவச இணைய இணைப்பு அட்டைகள் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
ஜனவரி மாதம் இரண்டாவது வாரம் – சாலை பாதுகாப்பு வாரமாக அனுசரிக்கப்படுகிறது.
ஐ.நா அமைப்பில் இடம் பெறுகிறது இந்தியாவின் தேசிய பேரிடர் மீட்பு படை
ஐ.நா வின் பேரிடர் மீட்பு நடவடிக்கைகளில் இந்தியாவும் ஒரு பகுதியாக விரைவில் இடம்பெற உள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF)இயக்குனர் எஸ் என் பிரதான் தெரிவித்தார்.
சுவிட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச தேடுதல் மற்றும் மீட்பு ஆலோசனைக்குழு இந்த அங்கீகாரத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் தேசிய பேரிடர் மீட்பு படை 2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
ஐந்து பேருக்கு பிரவாசி பாரதிய சம்மான் விருது
அமெரிக்க இந்திய கூட்டாளர் மன்றத்தின் தலைவர் முகேஷ் ஆகி
இந்திய சங்கங்களின் கூட்டமைப்பு
சுற்றுச்சூழல் தொழில்நுட்பத்தின் கீழ் அரவிந்த் புக்கான்
இந்திய கலாசார மேம்பாட்டு பணிக்காக நீலு குப்தா
மருத்துவத்தில் சிறந்த பங்களிப்புக்காக மருத்துவர் சுதாகர் ஜோன்னலகட்டா