You are currently viewing JANUARY 10,2021-CURRENT AFFAIRS

JANUARY 10,2021-CURRENT AFFAIRS

  • ஜனவரி 16 முதல் கரோனா தடுப்பூசி

நாட்டின் முதலாவது கரோனா  பாதிப்பு கடந்த ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி கேரளத்தில் கண்டறியப்பட்டது. இந்த நோய்க்கான தடுப்பூசி உற்பத்தியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய தீநுண்மியியல் மையம் ஆகியவற்றுடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்ஸின் என்ற தடுப்பூசியை நாட்டிலேயே தயாரித்தது.பிரிட்டனின் அஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்துடன் இணைந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்த கோவிஷீல்டு  கரோனா தடுப்பூசியும் இந்தியாவில்  சீரம் இன்ஸ்ட்யூட் ஆஃப் டெக்னாலஜி நிறுவனத்தால் பரிசோதனை செய்யப்பட்டது.அவ்விரு தடுப்பூசிகளையும் அவசரகால பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் வழங்கியது.அந்த இரு தடுப்பூசிகளும் ஜனவரி 16 ஆம் தேதி முதல் கட்டமாக 3 கோடி சுகாதார பணியாளர்களுக்கு செலுத்தப்பட இருக்கிறது.

கோ-வின் வலைத்தளம்

கரோனா தடுப்பூசி சேமிப்பு, விநியோகம், தடுப்பூசியை எடுத்துக்கொள்ளும் நபர்களின் விவரங்கள் உள்ளிட்டவற்றை கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்ட வலைதளம்.

  • கமலா ஹாரிஸ் செய்தி தொடர்பாளராக இந்திய அமெரிக்கர்

அமெரிக்காவின் துணை அதிபர் பொறுப்பை கமலா ஹாரிஸ் ஏற்ற பிறகு அவரது துணை செய்தி தொடர்பாளராக செயல்பட இந்திய வம்சாவளியை சேர்ந்த சபரீனா சிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

  • 16வது வெளிநாடு வாழ் இந்தியர் தின மாநாடு ஜனவரி 9 நடத்தப்பட்டது.

இதில் சிறப்பு விருந்தினராக  சுரினாம்  அதிபர் சந்திரிகாபிரசாத் சந்தோகி  கலந்து கொண்டார்.

தென்னாப்பிரிக்காவில் இருந்த மகாத்மா காந்தி கடந்த 1915ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதி இந்தியா திரும்பினார். அந்த நாளை நினைவு கூறும் விதமாக ஆண்டுதோறும் வெளிநாடுவாழ் இந்தியர் தினமாக (பிராவாசி பாரதிய திவாஸ் )கொண்டாடப்பட்டு வருகிறது. “தற்சார்பு இந்தியாவுக்கு பங்களிப்பு”என்பது நடப்பு ஆண்டுக்கான வெளிநாடுவாழ் இந்திய தினத்தின் மையக்கருத்து

  • முன்னாள் மத்திய அமைச்சர் மாதவ் சிங் சோலங்கி மறைவு.

முக்கிய குறிப்பு:

குஜராத் முதல்வராக மூன்று முறை பதவி வகித்தவர் மாதவ் சிங் சோலங்கி.கடந்த 1991-1992ம் ஆண்டுகளில் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • கடல்சார் ஆராய்ச்சி கப்பல் “சாகர் அன்வேசிகா”

தேசிய கடல் தொழில் நுட்ப கழகத்தின் “சாகர் அன்வேசிகா” என்ற ஆராய்ச்சிக் கப்பலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்த கப்பல் பிரதமரின் “சுயசார்பு இந்தியா” திட்டத்தின் கீழ் கட்டமைக்கப்பட்டது

JANUARY 10,2021 – CURRENT AFFAIRS PLAYLIST VIDEO CLASS WITH EXPLANATION