- கரோனா சொட்டு மருந்து முதல்கட்ட சோதனை:
கரோனா நோய்த்தொற்று பாதிப்பை தடுப்பதற்காக மூக்கின் வழியாக செலுத்தும் வகையிலான சொட்டு மருந்தின் முதல் கட்ட பரிசோதனை மார்ச் மாதத்துக்குள் தொடங்கப்படும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.
வாஷிங்டன் பல்கலைக் கழகத்துடன் இணைந்து கரோனாவுக்கு எதிரான சொட்டு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது
- ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் மூன்று குழுக்களுக்கு தலைமை வகிக்கிறது இந்தியா
இந்தியா தலைமை வகிக்கவுள்ள குழுக்கள்
- லிபியா தடைக்குழு
- தலிபான் தடைக்குழு
- பயங்கரவாத எதிர்ப்பு குழு
ஐ.நா.வுக்கான இந்திய தூதர் டி.எஸ் திருமூர்த்தி
- தெற்காசிய கரோனா மாநாடு
கரோனா தடுப்பு மற்றும் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளில் தெற்காசிய நாடுகளிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான மாநாட்டை சீனா முதல் முறையாக நடத்தியது.இதில் பங்கேற்ற நாடுகள்
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான், நேபாளம், இலங்கை,வங்கதேசம்
- அடுத்த நிதி ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 8.9 சதவீதம் வளர்ச்சி காணும்
அடுத்த நிதி ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் சரிவில் இருந்து மீண்டு 8.9 சதவீதம் வளர்ச்சியை காணும் என ஐ.ஹெச்.எஸ் மார்கிட் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.வரும் மார்ச் மாதத்துடன் முடிவடையவுள்ள நிதி ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் -7.7% சரிவை சந்திக்கும் என தேசிய புள்ளியல் ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.இது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான பின்னடைவாகும். ஆனால் 2021 ஏப்ரலில் தொடங்கவுள்ள நிதியாண்டில் பொருளாதாரம் சரிவிலிருந்து மீண்டு 8.9 சதவீதம் வளர்ச்சியை தக்க வைக்கும் என அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
- சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்ற கட்டிடம்- ஒரு அலசல்
தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் நாடாளுமன்ற கட்டிடம் 1921 இல் தொடங்கி ஆறு ஆண்டுகள் கழித்து கட்டி முடிக்கப்பட்டன
கட்டிட வடிவமைப்பாளர்களான அட்மின் லுதியான்-ஹெர்பர்ட் பேக்கர் இருவரும் தற்போதைய நாடாளுமன்ற கட்டிடக்கலையின் வடிவமைப்பை உருவாக்கினர்.
1927ஆம் ஆண்டு இந்த கட்டடம் இயங்கத் துவங்கியது.
முதல் மக்களவையில் 489 உறுப்பினர்கள் இருந்தனர். ஒவ்வொரு உறுப்பினரும் தலா ஏழு லட்சம் மக்களின் பிரதிநிதியாக இருந்தனர்.
இந்திய அரசியல் சாசனத்தின் 81 ஆவது பிரிவு நாடாளுமன்றத் தொகுதிகளில் மறுவரையறை செய்ய வகை செய்கிறது.
முந்தைய மறுவரையரை 1971ஆம் ஆண்டில் மக்கள் தொகையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. மாநில வாரியாக தொகுதி மறுவரையறை 2026 ஆம் ஆண்டில் செய்யப்படவேண்டும்.
எனவே நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் உள்நாட்டு கட்டடக்கலை மூலம் புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டப்பட உள்ளது. இந்திய நாட்டின் 75வது சுதந்திர தினத்தில் நாட்டின் தற்சார்பை பூர்த்தி செய்யும் வகையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
JANUARY 09,2021 – CURRENT AFFAIRS PLAYLIST VIDEO CLASS WITH EXPLANATION
