You are currently viewing JANUARY 08,2021 – CURRENT AFFAIR
DAILY CURRENT AFFAIRS JAN 08,2021 TNPSC RRB TNUSRB SSC

JANUARY 08,2021 – CURRENT AFFAIR

  • கரோனோவிலிருந்து ஒரு கோடி பேர் குணமடைந்தனர்
  • உத்தரகண்ட், தெலுங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் பதவியேற்பு

உத்தரகண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ராகவேந்திர சிங் சௌகான் பதவி ஏற்றுக் கொண்டார்.அவருக்கு ஆளுநர் பேபி ராணி மௌர்யா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

உத்தரகாண்ட் முதல்வர்- திரிவேந்திர சிங் ராவத்

தெலுங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக  ஹிமா கோலி பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

தெலுங்கானா முதல்வர்- சந்திரசேகர ராவ்

  • அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனின் வெற்றிக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்.

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள

புதிய அமெரிக்க அதிபர் -ஜோ பைடன்

துணை அதிபர்- கமலா ஹாரிஸ்

(தேர்தல் நடைபெற்ற நாள் நவம்பர் 03,2020)

  • பொருளாதார வளர்ச்சியில் -7.7 சதவீதம் பின்னடைவு

மத்திய அரசு நிகழ் 2020-2021 ஆம் நிதி ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி -7.7 சதவீதமாக இருக்கும் என மத்திய அரசின் மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தேசிய புள்ளியியல் அலுவலகம்  வெளியிட்டது.

கடந்த நிதியாண்டில் 4.2 சதவீதம் வளர்ச்சியை இந்திய பொருளாதாரம் எட்டியிருந்தது. நடப்பு 2020-2021 ஆம் ஆண்டில் நிதியாண்டில் -7.7 சதவீதம் அளவுக்கு பின்னடைவை சந்திக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

(இந்திய ரிசர்வ் வங்கி -7.5% நிகழாண்டில் பொருளாதாரம் பின்னடைவு அடையும் என ஏற்கனவே மதிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது)

  • இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியின் நிர்வாக இயக்குனராக வெங்கட்ராமு பொறுப்பேற்றார்.

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியின் நிர்வாக இயக்குனர் (MD) மற்றும் தலைமை செயல் அதிகாரியாக (CEO) ஜே.வெங்கட்ராமு பொறுப்பேற்றுக்கொண்டார்.

JANUARY 08,2021 – CURRENT AFFAIRS PLAYLIST VIDEO CLASS WITH EXPLANATION

DAILY CURRENT AFFAIRS JAN 08,2021 TNPSC RRB TNUSRB SSC