You are currently viewing JANUARY 07,2021-CURRENT AFFAIR
DAILY CURRENT AFFAIRS JAN 07,2021 | TNPSC | RRB | TNUSRB | SSC |

JANUARY 07,2021-CURRENT AFFAIR

  • தில்லி கிருஷி பவனில்  கட்டுப்பாட்டு மையம்

பறவைக் காய்ச்சல் பாதிப்பு உள்ள மாநிலங்களுக்கு மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட டெல்லி கிருஷி பவனில் கட்டுப்பாட்டு மையம் மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

  • பி.சி, எம்.பி.சி மாணவர்களுக்கும் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது

புதுவையில் தலித்,  பழங்குடியின மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள முழுக் கல்விக் கட்டண செலவை அரசே ஏற்கும் திட்டம் பி.சி,  எம்.பி.சி மாணவ மாணவிகளுக்கும் அமல்படுத்தப்படும் என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

  • எழுத்தாளர் ஆ.மாதவன் பற்றிய சிறு குறிப்பு:

சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் ஆ.மாதவன் சமீபத்தில் (05.01.2021)காலமானார். அவரைப் பற்றிய சிறுகுறிப்பு தேர்வு நோக்கில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

 இயற்றிய புதினங்கள்

  1. புனலும் மணலும்
  2. கிருஷ்ணப்பருந்து
  3. தூவானம்

இயற்றிய குறும்புதினங்கள்

  1. எட்டாவது நாள்
  2. காளை

இயற்றிய சிறுகதைத் தொகுப்புகள்

  1. கடைத்தெருக்  கதை
  2. மோக பல்லவி
  3. காமினி மூலம்
  4. ஆனைச்சந்தம்
  5. அரேபியக் குதிரை
  6. முத்துக்கள் பத்து
  7. பெயர் இல்லாத கதை

            சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்

“இலக்கிய சுவடுகள்” என்ற நூலுக்காக 2015ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது இவருக்கு வழங்கப்பட்டது. தமிழக அரசின் கலைமாமணி விருது, மகாகவி உள்ளூர் விருது,  விஷ்ணுபுரம் விருது, சிறுகதைச் செல்வர், தமிழ்மாமணி உள்ளிட்ட பல விருதுகளை இவர் பெற்றுள்ளார்.

  • திறன்மிகு இந்தியர்கள் 14 துறைகளில் ஜப்பானில் பணியாற்றுவதற்கான உடன்படிக்கை – மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • தி பிரசிடென்ஷியல்  இயர்ஸ் (2012-2017)

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள் எழுதிய சுயசரிதை நூல்.

  • பசுமை வளாகமாகும் அரசு அலுவலகங்கள்-கேரளம்

கேரளத்தில் உள்ள 10,000 மாநில அரசு அலுவலகங்கள் பொதுத்துறை நிறுவனங்கள் குடியரசு தினமான ஜனவரி 26 ஆம் தேதி முதல் பசுமை வளாகங்கள் ஆக அறிவிக்கப்பட உள்ளன.

  • முதல்முறையாக 4 ஆவது நடுவராக பெண்.

சிட்னி டெஸ்டில் நான்காவது நடுவராக ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிளேர் போலோ சாக் நியமிக்கப்பட்டுள்ளார்.ஆடவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் பெண் ஒருவர் நான்காவது நடுவராக செயல்படுவது இது முதல் முறையாகும்.

இவர் ஏற்கனவே ஆடவருக்கான ஒருநாள் ஆட்டத்தில் நியமிக்கப்பட்ட முதல் பெண் கள நடுவர் என்பது குறிப்பிட்டத்தக்கது.

JANUARY 07,2021 – CURRENT AFFAIRS PLAYLIST VIDEO CLASS WITH EXPLANATION

DAILY CURRENT AFFAIRS JAN 07,2021 | TNPSC | RRB | TNUSRB | SSC |
DAILY CURRENT AFFAIRS JAN 07,2021 | TNPSC | RRB | TNUSRB | SSC |