You are currently viewing JANUARY 06,2021 – CURRENT AFFAIRS

JANUARY 06,2021 – CURRENT AFFAIRS

  • பிரிட்டன் பிரதமரின் இந்திய பயணம் ரத்து

இந்திய நாட்டின் 72வது குடியரசு தின விழா ஜனவரி 26,2021 அன்று நடைபெற இருக்கின்றது. அந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் போரிஸ் ஜான்சன் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக போரிஸ் ஜான்சன் பங்கேற்காதது உறுதியானது.

2020 ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசு தின விழாவில் பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனாரோவும்,  2019 ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசு தின விழாவில் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமஃபோசாவும்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

  • தைப்பூசத்துக்கு பொதுவிடுமுறை தமிழக முதல்வர் அறிவிப்பு அரசாணை வெளியீடு

இனி வரும் ஆண்டுகளில் தைப்பூச திருவிழா தினத்தை பொது விடுமுறை பட்டியலில் சேர்க்கவும் உத்தரவிடபட்டுள்ளது.

  • புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

“சென்ட்ரல் விஸ்டா” திட்டத்தின்கீழ் கட்டப்பட உள்ள புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 10,2020 அன்று அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது

  • எழுத்தாளர் ஆ.மாதவன் காலமானார்

சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் ஆ.மாதவன் காலமானார்.இவர் எழுதிய நூல்கள் புனலும் மணலும்,கிருஷ்ண பருந்து

கடந்த 2015ஆம் ஆண்டு “இலக்கிய சுவடுகள்” என்ற நாவலுக்காக மாதவனுக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.

  • தி  பிரஸிடெண்ஷியல் இயர்ஸ்  (2012-2017) – புத்தகம்

பிரணாப் முகர்ஜி எழுதிய சுய சரிதை

JANUARY 06,2021 – CURRENT AFFAIRS- VIDEO CLASS WITH EXPLANATION