You are currently viewing JANUARY 05,2021 – CURRENT AFFAIRS

JANUARY 05,2021 – CURRENT AFFAIRS

  • சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானர்ஜி பதவியேற்பு

சென்னை உயர்நீதிமன்ற 50 ஆவது தலைமை நீதிபதியாக சஞ்சய் பேனர்ஜி ஜனவரி 4 பதவியேற்றுக்கொண்டார்.

இவர் கொல்கத்தா உயர்நீதிமன்ற  மூத்த நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது

  • முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள்

இ-சஞ்சீவனி திட்டம்:

கொரோனா காலத்தில் நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இணைய வழியே மருத்துவ ஆலோசனை வழங்கும் திட்டம்

ஆயுஷ்மான் பாரத் திட்டம்:

ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 5 லட்சத்துக்கு மருத்துவ காப்பீட்டு வழங்கும் திட்டம்.

 மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்- ஹர்ஷ்வர்தன்

  • பிரிட்டனில் பயன்பாட்டுக்கு வந்தது ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கிய கோவிஷீல்டு தடுப்பூசி:

உலகிலேயே முதல் நாடாக பிரிட்டனில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.

  • உயரிய நீதிமன்ற நீதிபதி பதவிக்கு இந்திய அமெரிக்கர்:

அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட மேல் முறையீட்டு நீதிமன்ற இணை நீதிபதி பதவிக்கு இந்திய வம்சாவளி வழக்குரைஞரான விஜய் சங்கரை அதிபர் டொனால்டு டிரம்ப் பரிந்துரைத்துள்ளார்.

  • தமிழ் அகாடமி டெல்லி அரசு அமைத்தது

தமிழ்மொழியின் சிறப்பையும் தமிழ் கலாச்சாரத்தின் பெருமைகளையும் பரப்பும் வகையில் டெல்லியில் தமிழ் அகாதமி அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியின் கலாச்சாரத்தை மேம்படுத்தும் வகையில் தில்லி அரசு அறிவித்துள்ள தமிழ் அகாதமிக்கு 13 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய குறிப்பு:

  • தஞ்சை மாணவர் ரியாஸ்தீன்  சாதனை: உலகில் மிகவும் எடை குறைந்த பெம்டோ செயற்கைக்கோளை உருவாக்கினார்.

கியூப் இன் ஸ்பேஸ் என்ற உலகளாவிய புதிய கண்டுபிடிப்புக்கான போட்டியில் வெற்றி பெற்றார் ரியாஸ்தீன்

இவர் விஷன் சேட் வி1 மற்றும் வி2 என பெயரிடப்பட்ட இரண்டு பெம்டோ செயற்கைக்கோள்களை வடிவமைத்தார். ஒவ்வொன்றும் 37 மில்லி மீட்டர் உயரமும் 33 கிராம் எடையும் கொண்டவை.

இவற்றில் விஷன் சேட் 1 என்ற செயற்கைகொள் 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவில் உள்ள வெர்ஜினியாவிலிருந்து நாசாவின் எஸ் ஆர்-7 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளது.

விஷன் சேட் 2 என்ற செயற்கைக் கோள் 2021 ஆகஸ்ட் மாதத்தில் நாசாவின் ஆர் பி -6 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

JANUARY 05,2021 – CURRENT AFFAIRS- VIDEO CLASS WITH EXPLANATION

https://youtu.be/Glci-DdINeI