You are currently viewing JANUARY 04,2021 – CURRENT AFFAIRS

JANUARY 04,2021 – CURRENT AFFAIRS

  • இந்திய கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு அரசு ஒப்புதல்

அவசரகால பயன்பாட்டின் அடிப்படையில் இவ்விரு தடுப்பூசிகளையும் பயன்படுத்த, பொதுமக்களுக்கு செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

கோவேக்ஸின்: முழுவதும் உள்நாட்டிலேயே பாரத் பயோ டெக் நிறுவனமும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் இணைந்து தயாரித்த தடுப்பூசி.

கோவிஷில்டு: ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகமும் மற்றும் உலகின் மிகப்பெரிய மருந்து உற்பத்தி நிறுவனமான புனேவில் உள்ள சீரம் நிறுவனமும் பிரிட்டனின் அஸ்ட்ராஜெனிகா நிறுவனமும் இணைந்து தயாரித்த தடுப்பூசி.

  • ஜனவரி 4 :  உலக பிரெய்லி தினம்

 பிரான்ஸ் நாட்டவரான லூயிஸ் பிரெய்லி பிறந்த தினம்

இவர் பார்வையற்றவர்களுக்கான கற்றல் முறைகளை உருவாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது

  • பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் சிறந்த வீடு கட்டுமான விருது அறிவிப்பு:

ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தை சேர்ந்த 65 முதியவர் அப்துல் லத்தீப் கணய் என்பவருக்கு  இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆவாஸ் யோஜனா திட்டம் நகர்ப்புற ஏழைகளுக்கான வீடு கட்டும் திட்டம் ஆகும்.

2015ஆம் ஆண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டது

இத்திட்டத்தின்கீழ் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு வீடு கட்டுவதற்காக மத்திய அரசு சார்பில் 1.66 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது

மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சர் -ஹர்தீப் சிங் பூரி

  • கொச்சி மங்களூரு இயற்கை எரிவாயு குழாய் திட்டம்:

கேரள மாநிலம் கொச்சி – கர்நாடக மாநிலம் மங்களூர் இடையிலான இயற்கை எரிவாயு திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி ஜனவரி 5ஆம் தேதி திறந்து வைக்கிறார்

ஒரே நாடு ஒரே எரிவாயு கட்டமைப்பு திட்டத்தின்  முக்கிய மைல் கல்லாக இந்த திட்டம் கருதப்படுகிறது. 450 கிலோ மீட்டர் தொலைவுக்கு குழாய் பதிக்கும் திட்டத்தை கெயில் இந்தியா நிறுவனம் மேற்கொண்டுள்ளது

JANUARY 04,2021 – CURRENT AFFAIRS- VIDEO CLASS WITH EXPLANATION

https://youtu.be/qRW_RXL2aJA