You are currently viewing JANUARY 03,2021 – CURRENT AFFAIRS

JANUARY 03,2021 – CURRENT AFFAIRS

  • பிரதமர் அவர்களால் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தின் அடிக்கல் நாட்டு விழா

ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் ஐஐஎம் கல்வி நிறுவனத்திற்காண நிரந்தர  வளாகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

  • முத்தலாக் தடை சட்டத்தின் கீழான குற்றத்துக்கு முன்ஜாமீன் வழங்க தடை இல்லை- உச்சநீதிமன்றம்

முத்தலாக் தடை சட்டத்தில் தடை என்பது ஒரு முஸ்லீம் கணவர் தொடர்பாக மட்டுமே செயல்படுகிறது எனவே முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட ஒரு குற்றத்திற்கு முன் ஜாமீன் வழங்குவதற்கு தடை இல்லை என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

  • முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் பூட்டா சிங் மறைவு.

சில தகவல்கள்:

  1. நான்கு பிரதமர்களின் கீழ் பணிபுரிந்தவர்
  2. எட்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்
  3. பீகார் மாநில ஆளுநராக பதவி வகித்தவர்
  4. 1986 ல்  ராஜீவ் காந்தி தலைமையிலான அமைச்சரவையில் மத்திய உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டவர்
  5. பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியின் போது 2007ஆம் ஆண்டில் பட்டியலினத்தவர்காண தேசிய ஆணையத்தின் (என்.சி.எஸ்.சி) தலைவராக நியமிக்கப்பட்டார்.
  • விழுப்புரம் அருகே சங்க கால உறைகிணறு

விழுப்புரம் அருகே வேடம் பட்டு கிராம ஏரிப் பகுதியில் பழங்கால கிணறு  கண்டறியப்பட்டது.

  • “வீரயுக நாயகன் வேள்பாரி” நாவலுக்கு மலேசிய விருது.

எழுத்தாளர் சு.வெங்கடேசனின் “வீரயுக நாயகன் வேள்பாரி” நாவல் மலேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மலேசியாவின் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் டான்ஸ்ரீ சோமா மொழி இலக்கிய அறவாரியத்தின் அனைத்துலக சிறந்த படைப்புக்கான நூலாக இந்த நாவல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சில தகவல்கள்

சு.வெங்கடேசன் எழுதிய முதல் நாவலான “காவல் கோட்டம்” 2011 ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

பொது அறிவு:

  • முப்படைகளில் பணி புரிந்த வீரர்- பிரிதிபல்சிங்

இந்திய வான்,தரை,கடல் படைகளில் பணிபுரிந்த ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் பிரிதிபல் சிங்.

JANUARY 03,2021 – CURRENT AFFAIRS- VIDEO CLASS WITH EXPLANATION

https://youtu.be/dyEgurIy6Mk