- லைட் ஹவுஸ் திட்டத்துக்கு 6 நகரங்களில் ஒரே சமயத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
லைட் ஹவுஸ் திட்டம்: சர்வதேச நாடுகளில் கட்டப்படும் வீடுகளில் பயன்படுத்தப்பட்ட தொழில் நுட்பங்கள் அடிப்படையில் லைட்ஹவுஸ் என்கிற முன்னோடி திட்டம் உருவானது.
- சென்னை- பெரும்பாக்கம்
- மத்திய பிரதேசம்- இந்தூர்
- குஜராத் -ராஜ்கோட்
- ஜார்கண்ட் -ராஞ்சி
- திரிபுரா -அகர்தலா
- உத்திரபிரதேசம் -லக்னோ
ஆகிய நகரங்களில் லைட் ஹவுஸ் திட்டம் செயல்படுத்தப் படுகின்றன.
இந்த ஆறு நகரங்களில் மொத்தம் 6,368 வீடுகள் நவீன முறையில் கட்டப்பட உள்ளன.
மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்: ஹர்தீப் சிங் பூரி
ஆஷா இந்தியா திட்டம்: நவீன வீட்டுவசதி தொழில்நுட்பம் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் புதிய நிறுவனங்களை ஊக்குவிக்கும் திட்டம்.
- ஜிஎஸ்டி வசூல் ரூபாய் 1.15 லட்சம் கோடியாக அதிகரித்து வரலாற்று சாதனை.
டிசம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ 1.15 லட்சம் கோடியாக அதிகரித்து புதிய உச்சங்களைத் தொட்டது
(இதற்கு முன் 2019 டிசம்பர் ஜிஎஸ்டி வசூல் 1.03 லட்சம் கோடி உடன் ஒப்பிடும்போது இது 12 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது)
- தமிழகத்தில் 17 இடங்களில் இன்று கரோனா தடுப்பூசி ஒத்திகை.
சென்னை, நீலகிரி திருநெல்வேலி, திருவள்ளூர், கோவை ஆகிய 5 மாவட்டங்களில் மொத்தம் 17 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை ஜனவரி 2, 2021 அன்று நடைபெறுகிறது.
- மத்திய அரசின் ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் விருது அறிவிப்பு
விருது பெறுபவர்கள்
1. கே அனுராதா
2. பி.லதா
( புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் )
நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆண்டு தோறும் சிறப்பாக சேவையாற்றும் செவிலியர்களுக்கு மத்திய அரசின் சுகாதாரத்துறை இவ்விருதினை வழங்குகிறது.
- ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமில்லாத உறுப்பினராக 8வது முறையாக இணைந்தது இந்தியா.
- ஆஸ்திரேலிய தேசிய கீதத்தில் திருத்தம்.
ஆஸ்திரேலிய தேசிய கீதத்தில் “இளமையான சுதந்திர நாடு” என்று குறிப்பிடப்பட்டிருந்த வார்த்தை ஜன 1, 2021 முதல் “ஒன்றுபட்ட சுதந்திர நாடு” என்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
- ஃபைஸர் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி:
அமெரிக்காவின் பைஸர் மற்றும் ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனங்கள் கூட்டாக உருவாக்கிய கரோனா தடுப்பூசியை ஏற்கனவே பிரிட்டன், அமெரிக்கா ஐரோப்பிய யூனியனில் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. இப்பொழுது உலக சுகாதார அமைப்பு அவசர காலங்களில் இந்த தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்த அனுமதி அளித்துள்ளது.
- சூரிய மின்சக்தியில் இயங்கும் புதுச்சேரி விமான நிலையம்:
நாட்டிலேயே முதல் முறையாக சூரிய மின்சக்தியில் இயங்கும் விமான நிலையம் என்ற பெருமையை புதுச்சேரி லாசுப்பேட்டை விமான நிலையம் பெற்றுள்ளது.
JANUARY 02,2021 – CURRENT AFFAIRS- VIDEO CLASS WITH EXPLANATION
