1. எரிசக்தி சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை பிரதமர் மோடிக்கு சர்வதேச விருது: பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு சர்வதேச எரிசக்தி சுற்றுச்சூழல் தலைமை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க, பிரிட்டிஷ் தகவல் சேவை நிறுவனமான ஐ.எச்.எஸ் மார்கிட் லிமிடெட் சார்பில் ஆண்டுதோறும் எரிசக்தி மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டின் போது சர்வதேச அளவில் எரிசக்தி சுற்றுச்சூழல் துறையில் சிறந்து விளங்குவதற்கு விருது வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு கரோனா அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்காவில் நடைபெற இருந்த மாநாடு ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு எரிசக்தி மாநாடு (செராவிக் 2021) கானொலி வாயிலாக நடைபெறுகிறது. இம்மாநாட்டில் சர்வதேச எரிசக்தி சுற்றுச்சூழல் தலைமை விருது பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
2. Feb 28 ல் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி -சி 51
3. உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் : இந்திய ஆடவர் அணிக்கு வெண்கலம்
எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் கஜகஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய ஆடவர் அணி வெண்கலம்
4. ஆசியாவின் நம்பர் 1 பணக்காரர் ஆனார் முகேஷ் அம்பானி