1. இஸ்ரோவுக்காக சேலம் மாணவர்கள் உருவாக்கிய செயற்கைக்கோள் பிப்ரவரி 28-இல் விண்ணில் பாய்கிறது: கோவையை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய ஸ்ரீ சக்தி சாட் செயற்கைக்கோள் வரும் பிப்ரவரி 28ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
2. இந்திய பொருளாதாரம் 13.7 சதவீதம் வளர்ச்சியை எட்டும் மூடிஸ் கணிப்பு: இந்தியப் பொருளாதாரம் வரும் 2022 ஆம் நிதியாண்டில் 13.7 சதவீதம் வளர்ச்சியை எட்டும் என சர்வதேச தரக்குறியீட்டு நிறுவனமான மூடிஸ் தெரிவித்துள்ளது.
3. சர்ச்சைக்குரிய இணையதள சட்டம் ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் நிறைவேற்றம்: செய்திகளை பகிர்வதற்காக கூகுள், முகநூல் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் கட்டணம் செலுத்துவது கட்டாயமாக்கும் சர்ச்சைக்குரிய சட்டத்தை ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் நிறைவேற்றி உள்ளது.
4. 18வது சென்னை சர்வதேச திரைப்பட நிறைவுவிழா: “என்றாவது ஒருநாள்” “சியான்கள்” “கா/பெ ரணசிங்கம்” படங்களுக்கு விருது
18வது சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னையில் நடைபெற்றது. இதில் 53 நாடுகளில் இருந்து 91 திரைப்படங்கள் பங்கேற்றன. இதில் சிறந்த படமாக வெற்றி துரைசாமி இயக்கி தயாரித்த “என்றாவது ஒருநாள்” திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது. சிறந்த தயாரிப்புக்கான பரிசையும் இப்படம் வென்றது. மேலும் இரண்டாவது சிறந்த திரைப்படமாக “சியான்கள்” திரைப்படம் தேர்வானது. இதைத் தவிர சிறந்த நடிப்பு பங்களிப்புக்காக கா/பெ ரண சிங்கம் படத்தில் நாயகியாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் விருது பெற்றார்.
5.வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகிக்கும் திட்டம் டெல்லி அரசு அறிவிப்பு: டெல்லியில் வரும் மார்ச் மாதம் முதல் பொது மக்களின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்பட உள்ளன. இதற்கான அறிவிக்கையை டெல்லியை ஆளும் ஆத்மா ஆம் ஆத்மி அரசு வெளியிட்டது.
இதுதொடர்பாக “முக்கிய மந்திரி கர் கர் ரேஷன் யோஜனா” என்னும் பெயரில் ஒரு அறிக்கையை டெல்லி அரசு வெளியிட்டது. இதில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013 இன் படி பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.