1. இந்தியாவைச் சேர்ந்தவருக்கு கம்போடிய நாட்டின் உயரிய விருது: இந்தியாவைச் சேர்ந்த கௌஷிக் பரூவா கம்போடிய அரசின் உயர்ந்த விருதை பெற்றுள்ளார்.தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவின் வேளாண்மை மேம்பாட்டுக்கான சர்வதேச நிதியத்தின் இயக்குனராக பதவி வகிக்கும் அவருக்கு வேளாண் துறை சார்ந்த சேவைகளுக்காக இந்த விருதை வழங்கி அந்நாட்டு அரசு கெளரவித்துள்ளது.
2. 12 பேருக்கு சர்வதேச ஊழல் தடுப்பு விருது – இந்திய சமூக ஆர்வலர் அஞ்சலி பரத்வாஜ் தேர்வு
ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிராக போராடும் 12 பேருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் ஊழல் தடுப்பு சாம்பியன் விருதை அறிவித்துள்ளது. வெவ்வேறு நாடுகளை சேர்ந்த 12 தனிநபர்கள் இந்த விருதுக்கு தெர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இந்த பட்டியலில் இந்திய சமூக ஆர்வலரான அஞ்சலி பரத்வாஜும் இடம்பெற்றுள்ளார். 48 வயதாகும் இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி வரும் உறுப்பினர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
3. ஜப்பானில் தற்கொலைகளை தடுக்க தனிமை அமைச்சகம் : ஜப்பானில் கரனா பிரச்சினையால் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தம் மற்றும் பல்வேறு நெருக்கடிகளால் கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவு தற்கொலை விகிதம் அதிகரித்துள்ளது.
இதனைத் தடுப்பதற்காக தனிமையைப் போக்கும் துறை உருவாக்கப்பட்டு அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் யோஷிஹிடே சுகா அறிவித்துள்ளார்.
உலகளவில் 2018ல் பிரிட்டன் முதல் நாடாக தனிமைக்கான அமைச்சகத்தினை உருவாக்கியது.
4. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் : மோடேரா ஸ்டேடியம் நரேந்திரமோடி மைதானமானது
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத்தில் உள்ள நேரு ஸ்டேடியம் நரேந்திரமோடி மைதானம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
5. பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் பிப்ரவரி 24: பெண் குழந்தைகளுக்காக ஆற்றிய உயர்ந்த சேவையினை நினைவு கூறும் வகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதி மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அனுசரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
6. ஐ நா தூதராக லிண்டா தாமஸ்: அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் : ஐ. நா அமைப்புக்கான புதிய அமெரிக்க தூதராக லிண்டா தாமஸ் கிரீன்ஃபீல்ட் நியமிக்கப்பட்டுள்ளதற்க்கு அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.