You are currently viewing DAILY CURRENT AFFAIRS FEB 23,2021 | TNPSC | RRB | TNUSRB | SSC |

DAILY CURRENT AFFAIRS FEB 23,2021 | TNPSC | RRB | TNUSRB | SSC |

1.  கடல்சார் இந்தியா மெய்நிகர் உச்சி மாநாடு 2021

மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து துறை சார்பில் மார்ச் 2 முதல் மார்ச் 4ஆம் தேதி வரை கடல்சார் இந்தியா உச்சிமாநாடு இணையவழியில் நடைபெறுகிறது.

2.  ஆறாவது முறையாக புதுச்சேரி அரசு கவிழ்ந்தது.

 1973ஆம் ஆண்டு பரூக் மரைக்காயர் என்பவர் முதலமைச்சராக இருந்தபொழுது புதுச்சேரி அரசு முதல் முறையாக கவிழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

3.  சேலம் மாவட்டம் தலைவாசலில் ரூபாய் 1022 கோடியில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி நிலையம் மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரி திறந்து வைக்கப்பட்டது.

4.  இளையோர் குத்துச்சண்டை போட்டி:

மாட்டினிக்ரோவில் நடைபெற்ற இளையோர் குத்துச்சண்டை போட்டியில் மகளிர் பிரிவில் இந்தியா 5 தங்கம் உட்பட 12 பதக்கங்களுடன் பட்டியலில் முதலிடம் பெற்றது. இரண்டாவது இடத்தில் உஸ்பெகிஸ்தான் மூன்றாவது இடத்தில் செக்குடியரசு நாடுகளும் இடம் பிடித்தன. ஆடவர் பிரிவில் இந்தியா 2 தங்கம் உள்பட 12 பதக்கங்களுடன் 2ஆம் இடம் பிடித்தது உஸ்பெகிஸ்தான் முதலிடத்திலும் உக்ரைன் மூன்றாம் இடமும் பிடித்தன.

5.  இந்தியாவில் பிரிக்ஸ் உச்சி மாநாடு சீனா ஆதரவு

 

 பிரேசில்,  ரஷ்யா,  இந்தியா,  சீனா,  தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை உறுப்பினராக கொண்டிருக்கும் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 2021 ஆண்டுக்கான தலைமைப் பொறுப்பு இந்தியா ஏற்றுள்ளது. இந்த ஆண்டுக்கான உச்சி மாநாட்டையும் இந்தியா நடத்த உள்ளது. இதற்கு சீனா ஆதரவு அளித்துள்ளது. இதற்காகவே டெல்லியில் சுஷ்மா ஸ்வராஜ் பவனின் அமைக்கப்பட்டிருக்கும் பிரிக்ஸ் செயலகத்தில் இந்தியாவின் பிரிக்ஸ் 2021 வலைதளத்தை வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிமுகப்படுத்தி தொடங்கி வைத்தார்.

DAILY CURRENT AFFAIRS FEB 23,2021 TNPSC RRB TNUSRB SSC