You are currently viewing DAILY CURRENT AFFAIRS FEB 22,2021 | TNPSC | RRB | TNUSRB | SSC |

DAILY CURRENT AFFAIRS FEB 22,2021 | TNPSC | RRB | TNUSRB | SSC |

1.  பிஎம்-கிசான் தேசிய விருதுக்கு ஆந்திரத்தின் அனந்தபுரமு மாவட்டம் தேர்வு : ஆந்திர மாநிலம் அனந்தபுரமு மாவட்டம் பிரதமரின் விவசாயிகள் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

2.58 ஆண்டுகளுக்குப் பிறகு நாகாலாந்து சட்டப்பேரவையில் தேசிய கீதம் பாடப்பட்டது.1963ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி நாகாலாந்து தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டது அன்றிலிருந்து தற்போதுவரை நாகாலாந்து சட்டப்பேரவையில் தேசிய கீதம் பாடப்படவில்லை.இந்நிலையில் 58 ஆண்டுகளுக்குப் பிறகு நாகாலாந்து சட்டப்பேரவையில்  முதல் முறையாக தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது.

3.  சந்திராயன் 3 விண்கலம் 2022ல் ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்:சந்திராயன் 3 திட்டப் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் அனைத்துப் பரிசோதனைகளையும் முடித்து 2022ஆம் ஆண்டில் அது விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய சந்திராயன் 2 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் 2019ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தியது. பல்வேறு கட்ட பயணங்களுக்கு பிறகு செப்டம்பரில் நிலவில் இறங்கிய போதிலும் நிலவில் சந்திராயன் 2 விண்கலத்தின்  லேண்டர் திட்டமிட்டபடி தரை இறங்கவில்லை. தொழில்நுட்பக் கோளாறால் வேகமாக சென்று நிலவின் தரையில் மோதியதாக கூறப்படுகிறது.இந்நிலையில் 2020ஆம் ஆண்டு இறுதியில் சந்திராயன் 3 திட்டத்தை ரூபாய் 615 கோடியில் செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்தது. இந்த சூழலில் சந்திராயன்-3 விண்கலம் அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ககன்யான் திட்டம் : மனிதனை விண்ணுக்கு அனுப்பும் “ககன்யான்” திட்டத்தின் பரிசோதனை ஒட்டம் இந்தாண்டு இறுதியில் செயல்படுத்தப்பட உள்ளது என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

 

4.  ஹோஷங்கபாத் நகரின் பெயர் மாறுகிறது:

மத்திய பிரதேசத்தின் ஹோஷங்கபாத் நகரின் பெயர் நர்மதாபுரம் என மாற்றப்படும் என மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சவுகான் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 

5.  கி.ரா. வின் “மிச்சக் கதைகள்” நூல் வெளியீடு

பிரபல எழுத்தாளர் கி. ராஜநாராயணனின்  மிச்ச கதைகள் நூல் வெளியிடப்பட்டுள்ளது.

 

6.  9வது முறையாக ஜோகோவிச் சாம்பியன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீரரான நோவக் ஜோகோவிச் ஒன்பதாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் டானில் மெட்வதேவுடன் மோதினார்.

 

 

7.  1971ஆம் ஆண்டின் வெற்றி பொன்விழா ஓட்டம்: 1971ஆம் ஆண்டு பாகிஸ்தான் போரில் பெற்ற வெற்றியின் ஐம்தாம் ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பொன்விழா வெற்றி ஓட்டம் என்ற பெயரில் சென்னையில் நடைபெற்ற பத்து கிலோமீட்டர் மராத்தான் ஓட்டம் நடைபெற்றது.

DAILY CURRENT AFFAIRS FEB 22,2021 TNPSC RRB TNUSRB SSC