1. செவ்வாயில் தரையிறங்கியது பேர்சவரன்ஸ்:
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு சாத்தியக் கூறுகள் உள்ளனவா என்பதை பற்றிய ஆய்வை மேற்கொள்ள அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்தை 2020ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி அனுப்பியது.
பிரசவரன்ஸ் விண்கலத்தின் ரோவரின் வழிகாட்டுதல், இயக்குதல் மற்றும் கட்டுப்படுத்துதல் பிரிவின் தலைவராக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இந்திய பெண் விஞ்ஞானியான சுவாதி மோகன் தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பெர்சவரன்ஸ் விண்களத்தில் இரண்டு இறக்கைகளுடன் கூடிய சிறிய ஹெலிகாப்டர் ஒன்றும் ஒருங்கிணைந்த ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.பெர்சவரன்ஸ் தரை இறங்கிய பிறகு அதிலிருந்து வெளியேறும் இந்த ஹெலிகாப்டர் மூன்று நாட்கள் செவ்வாய் கிரகத்தை சுற்றி வர உள்ளது. இதன் மூலம் வேற்று கிரகத்திற்கு சிறிய ரக ஹெலிகாப்டர் அனுப்பிய முதல் விண்வெளி ஆய்வு மையம் என்ற பெருமையை நாசா பெறுகிறது.
2. இந்துப்பு புவிசார் குறியீடு பாகிஸ்தான் முடிவு: இந்துப்பை தங்கள் அனுமதி இன்றி பிற நாடுகள் பயன்படுத்துவதை தடுப்பதற்காக அந்த உப்புக்கு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.
3. ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 20, 2021 முதல் நடைபெற உள்ள சர்வதேச பாதுகாப்பு கண்காட்சி மற்றும் கடற்படை கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக இந்திய தாக்குதல் கப்பல் “பிரளயா” அபுதாபி சென்றடைந்தது.
4. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் பெல்ஜியத்தின் எலிஸ் பெர்டன்ஸ் மற்றும் அரினா சபலென்கா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
5. உலக வர்த்தக சபையின் தலைவராக நியமிக்கப்பட்ட முதல் பெண் மற்றும் முதல் ஆப்பிரிக்கர்
நைஜீரியாவை சேர்ந்த கோசி ஓகேஞ்சோ இவியாலா உலக வர்த்தக சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 66 வயதான அவர் மார்ச் 1ஆம் தேதி முறைப்படி உலக வர்த்தக சபையின் தலைவராக பதவியேற்க உள்ளார். அன்றைய தேதியில் இருந்து அப்பதவியில் நான்கு ஆண்டுகள் பணியாற்ற உள்ளார்.உலக வர்த்தக சபையில் உறுப்பினர்களாக இருக்கும் 164 நாடுகளை சேர்ந்தவர்களும் தங்களின் ஒருமித்த ஆதரவை தெரிவித்தனர்.