1. தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவர் நியமனம்: தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்தின் தலைவராக தமிழகத்தை சேர்ந்த வெங்கடேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
துணைத் தலைவராக பீகாரை சேர்ந்த பாபன் ராவத் நியமிக்கப்பட்டுள்ளார்
2. தமிழக மாநில தகவல் ஆணையர்களாக பி. தனசேகரன், எம்.ஸ்ரீதர் நியமனம் : தமிழக மாநில தகவல் ஆணையர்களாக பி. தனசேகரன் மற்றும் எம்.ஸ்ரீதர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.தமிழக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் தமிழக அரசின் சார்பில் கடந்த 2005ஆம் ஆண்டு மாநில தகவல் ஆணையம் உருவாக்கப்பட்டது. ஆணையத்திற்கு முதலில் தலைமை தகவல் ஆணையர் ஒருவர் மற்றும் இரண்டு தகவல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டனர். அதன்பின் 2008ஆம் ஆண்டு தகவல் ஆணையர்களின் எண்ணிக்கை 2 லிருந்து 6 ஆக அதிகரிக்கப்பட்டது.அதன்படி தற்போது மாநில தகவல் தலைமை ஆணையராக ராஜகோபால், தகவல் ஆணையர்களாக செல்வராஜ், எஸ்டி தமிழ்செல்வன், பிரதாப் குமார், எஸ் முத்துராஜ் ஆகியோர் உள்ளனர். இதற்கிடையே தகவல் ஆணையர்களாக இருந்த தட்சிணாமூர்த்தி, முருகன் ஆகியோரது பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் புதிய ஆணையர்களை தேர்வு செய்யும் குழு பி.தனசேகரன் மற்றும் எம்.ஸ்ரீதர் ஆகியோரை தகவல் ஆணையர்களாக நியமித்தது. இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். புதிய தகவல் ஆணையர்கள் மூன்று ஆண்டுகள் அல்லது 65 வயதுவரை பதவியில் நீடிப்பர்.
3. ஜல் ஜீவன் திட்டம் மூலம் கிராமப்புறங்களில் 3.5 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு : ஜல் ஜீவன் திட்டம் மூலம் கிராமங்களில் 3.5 கோடி வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.இந்த சட்டத்தின்படி 2024ம் ஆண்டுக்குள் கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
4. சென்னை சர்வதேச திரைப்பட விழா பிப்ரவரி 18 தொடங்குகிறது. சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடர்ந்து எட்டு நாட்கள் நடைபெறுகிறது இந்த பட விழாவில் 53 நாடுகளில் இருந்து 91 படங்கள் திரையிடப்பட இருக்கின்றன.இந்த நிகழ்ச்சியில் 10 இந்திய மொழிகள் உட்பட 37 மொழிப்படங்கள் பங்கேற்கின்றன.
5. வாடிக்கையாளர்களுக்கு மருத்துவ காப்பீடு : ஐசிஐசிஐ லோம்பார்ட் நிறுவனத்துடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு மருத்துவ காப்பீடு அளிக்கும் திட்டத்தை பிளிப்கார்ட் நிறுவனம் தொடங்க உள்ளது.
6. இந்தியாவில் உற்பத்தியை தொடங்குகிறது அமேசான்: இந்தியா “மேக் இன் இந்தியா ” திட்டத்திற்கு உந்துதல் அளிக்கும் வகையில் அமேசான் நிறுவனம் அதன் மின்னணு சாதனங்களை இந்தியாவிலேயே தயாரிக்க இருப்பதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்