1. சீனாவின் ஐநா ஒருங்கிணைப்பாளராக இந்தியர் பொறுப்பேற்பு : சீனாவில் ஐநா ஒருங்கிணைப்பாளராக இந்தியாவின் சித்தார்த் சாட்டர்ஜி பொறுப்பேற்றார்
2.அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் சிறப்பு உதவியாளராக இந்திய அமெரிக்கர் நியமனம் : தொழிலாளர் விவகாரங்களில் அமெரிக்க அதிபரின் சிறப்பு உதவியாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரணிதா குப்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
3. கர்நாடக மாநிலத்தின் பாரம்பரியமான முதோல் இன நாய் விமானப்படையில் சேர்க்கப்பட்டுள்ளது.
4. அடுத்த நிதி ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி 10% வளரும் என எஸ் அன் பி குளோபல் கணித்துள்ளது. இந்திய உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி அடுத்த நிதி ஆண்டில் 10 சதவீதமாக இருக்கும் என எஸ் அன்ட் பி குளோபல் நிறுவனம் கணிப்பு வெளியிட்டுள்ளது.
5. 27% ஓபிசி இட ஒதுக்கீட்டை நான்காகப் பிரித்து இட ஒதுக்கீடு- ரோகிணி ஆணையம் பரிந்துரை செய்ய முடிவு : ஓபிசி பிரிவினருக்கு வழங்கப்படும் 27 சதவீத இட ஒதுக்கீட்டை 2, 6, 9 மற்றும் 10 என நான்கு வகையான உள் ஒதுக்கீடு அளிக்க மத்திய அரசால் அமைக்கப்பட்ட ரோகிணி ஆணையம் பரிந்துரை செய்ய திட்டமிட்டுள்ளது.