1. உலக வர்த்தக அமைப்புக்கு முதல் பெண் தலைவர்:
உலக வர்த்தக அமைப்பின் (WTO) முதல் பெண் தலைவராக நிகோசி ஓகோஞ்சோ இவேலா நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் தலைவரான ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த முதல் நபர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.164 உறுப்பு நாடுகளைக் கொண்ட உலகின் முதன்மையான வர்த்தக அமைப்பான WTO, நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் தொடர்பான விதிகளை முடிவு செய்கிறது.
2. புதுவண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் 13 திருநங்கைகளுக்கு பணி
புதுவண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் 13 திருநங்கைகளுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் பணி வழங்கியுள்ளது.
3. நாஸ்காம் மாநாடு பிப்ரவரி 17 முதல் 19 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மென்பொருள் நிறுவனங்களின் தேசியக்கூட்டமைப்பான நாஸ்காம் மாநாட்டில் பிரதமர் மோடி அவர்கள் பங்கேற்க உள்ளார். சுமார் 30க்கும் மேற்பட்ட நவீன மென்பொருள் தொழில்நுட்ப பொருட்கள் இந்த மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
4. நாகப்பட்டினம் மாவட்டம் காவிரிப்படுகையில் ரூபாய் 31, 500 கோடியில் அமையவுள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
முக்கிய திட்டங்கள்:
1. சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் ராமநாதபுரம் தூத்துக்குடி வரையில் 143 கிலோ மீட்டர் தூரத்துக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு கொண்டு செல்லும் பணி தொடங்கப்பட இருக்கிறது.
2.சென்னை மணலியில் ரூபாய் 500 கோடியில் பெட்ரோலில் கந்தகத்தை அகற்றும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
3. ரூபாய் 31, 500 கோடியில் சுத்திகரிப்பு நிலையம் : நாகப்பட்டினம் மாவட்டம் காவிரிப்படுகையில் இந்தியன் ஆயில் நிறுவனம் மற்றும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் இணைந்து இந்த நிலையத்தை அமைக்கிறது.