You are currently viewing DAILY CURRENT AFFAIRS FEB 15,2021 | TNPSC | RRB | TNUSRB | SSC |

DAILY CURRENT AFFAIRS FEB 15,2021 | TNPSC | RRB | TNUSRB | SSC |

1. உலக சாலை விபத்துகளில் இந்தியாவின் பங்கு 10 சதவீதம் என உலக வங்கி தகவல் தெரிவித்துள்ளது.

2.  ஆபரேசன் ஸ்மைல் திட்டம் நிறைவு: சென்னையில் சாலையோரம் சுற்றித்திரியும் குழந்தைகள், காணாமல் போன குழந்தைகள், பாதுகாப்பு பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளுக்கு உதவும் வகையில் சமூக பாதுகாப்பு துறை இணைந்து ஆபரேசன் ஸ்மைல் என்கிற திட்டம் காவல்துறையால் பிப்ரவரி 1ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை பெருநகரில் உள்ள 12 காவல் மாவட்டங்களிலும் அந்தந்த துணை ஆணையர் தலைமையில் ஒரு உதவி ஆணையர் கண்காணிப்பில் இரண்டு ஆய்வாளர்கள்,  குழந்தை நல காவல் அதிகாரி, குழந்தை நலக் குழுமம் உள்ளிட்டவர்களின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.ஆபரேசன் ஸ்மைல் திட்டம் பிப்ரவரி 15 ல் நிறைவடைந்தது.

3.  இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள் இரு முக்கிய பதவிகளில் நியமனம்:

 அமெரிக்க அரசின் தன்னார்வ மற்றும் சேவை நிறுவனமான அமெரிகார்ப்ஸில் முக்கிய பதவிகளுக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த இரு நிபுணர்கள் அதிபர் பைடன் நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டுள்ளனர். அமெரிகார்பஸ் என்பது அமெரிக்காவின் மத்திய அரசால் நடத்தப்படும் தன்னார்வ மற்றும் சேவை நிறுவனமாகும்.சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் உதவும் வகையில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.இந்த நிறுவனத்தின் மாநில மற்றும் தேசிய தலைவராக சோனாலி நிஜாவன்  மற்றும் வெளியுறவு பிரிவு தலைவராக ஸ்ரீ பிரஸ்டன் குல்கர்னி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

4.  துபாயில் நிறைவடைந்த உலக தடகள சாம்பியன்ஷிப் இந்தியா தங்கம் உட்பட 23 பதக்கங்களை வென்றது.

5.5000 ஆண்டுகளுக்கு முன்னர் இயங்கிவந்த மது ஆலையை  தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்:

கிமு 3150 முதல் கிமு 2613  வரை இருந்த முதலாம் பேரரசை உருவாக்கிய மன்னர் நார்மர் காலத்தில் அந்த மது ஆலை அமைக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது இரு வரிசைகளில் 40 பானைகள் பொருத்தப்பட்டு தானியங்களையும் நீரையும் கலந்து பீர் மதுபானம் தயாரிக்கும் வகையில் அந்த ஆலை அமைக்கப்பட்டுள்ளது

 

6.  100 பள்ளிகளில் மாண்டிசோரி கல்வி மாநகராட்சி திட்டம்: சென்னை மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சிட்டீஸ் (City Investment to Innovate, Integrate & Sustain ) என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநகராட்சி பள்ளிகளில் தரமான உள்கட்டமைப்புகளை கொண்ட வகுப்புகளை ஏற்படுத்துதல் கற்றல் மற்றும் கற்பித்தலுக்கான ஸ்மார்ட் வகுப்பறையை ஏற்படுத்துவது பள்ளிகளில் மேம்பட்ட விளையாட்டு வசதிகளை ஏற்படுத்துவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.சிட்டீஸ் திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி 100 மழலையர் பள்ளிகளில் மாண்டிசோரி கல்வி முறையை புகுத்தக் மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

DAILY CURRENT AFFAIRS FEB 15,2021 TNPSC RRB TNUSRB SSC