1. 10 வது உலக வானொலி தினம்: ஆண்டுதோறும் உலக வானொலி தினம் கொண்டாட்டப்பட 2011 ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோவால் திட்டமிடப்பட்டது. ஐ.நா.சபை இதற்கு 2012ஆம் ஆண்டு ஒப்புதல் அளித்தது. அந்த ஆண்டு முதல் பிப்ரவரி 13ஆம் தேதி உலக வானொலி தினம் கொண்டாடப்படுகிறது. இதன்படி 10வது உலக வானொலி தினம் பிப்ரவரி 13 2021 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.
2. ஐநா பொதுச்செயலாளர் பதவிக்கு இந்திய வம்சாவளிப் பெண் போட்டி:
தற்போது ஐ.நா வின் பொதுச் செயலாளராக அன்டோனியா குட்டரசு உள்ளார்.இவருடைய பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதியோடு முடிவடைகிறது.இந்த நிலையில் இந்த பதவிக்கு மீண்டும் அந்தோனியா குட்டரசு போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார் இவரை எதிர்த்து போட்டியிடப்போவதாக இந்திய வம்சாவளியை சேர்ந்த அரோரா அகங்க்ஷா என்பவர் அறிவித்துள்ளார்.தற்போது இவர் ஐநாவின் வளர்ச்சித் திட்டத்தின் தணிக்கை ஒருங்கிணைப்பாளராக பணியாற்றுகிறார்.
3. ஆசியாவிலேயே மிகப் பெரியதாக அமைய இருக்கின்ற முருகன் சிலை : கோவில்பட்டி அருகே உள்ள சொர்ண மலையின் மீது கதிர்வேல் முருகன் கோயில் அமைந்துள்ளது இக்கோயிலுக்கு அருகே மலை மீது 135 அடி உயர முருகன் சிலை அமைப்பதற்கான பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மலேசியா பத்துமலையில் உள்ள 108 அடி உயர முருகன் சிலையை செய்த திருவாரூரை சேர்ந்த சிற்பி தியாகராஜன் குழுவினரால் இந்த சிலையும் உருவாக்கப்பட உள்ளது. முருவனின் சிலை மட்டும் 123 அடி உயரம் பீடம் 12 அடி உயரம் என மொத்தம் 135 அடி உயரத்தில் அமைய உள்ளது.
4. பாரா தடகளம் இந்தியாவுக்கு 4 தங்கம்: துபாயில் 12வது பாரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது இதில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் F44 பிரிவில் அதிகபட்சமாக 61.22 மீ தூரம் எறிந்த இந்தியாவின் சந்திப் சவுத்ரி முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். அடுத்த நடந்த ஈட்டி எறிதல் F46 போட்டியில் 58.76 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்த இந்திய வீரர் அஜித் சிங் தங்கத்தை வென்றார். ஆண்களுக்கான ஈட்டி எறிதல் F41 போட்டியின்போது மூன்றாவது வாய்ப்பில் அதிகபட்சமாக 43.58 மீட்டர் தூரம் எறிந்த இந்தியாவின் நவ்தீப் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார் ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் F64 பிரிவில் 24.96 வினாடியில் கடந்த இந்தியாவின் பிரணவ் பிரசாந்த் தேசாய் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இதுவரை இந்தியா 9 தங்கம் உட்பட 17 பதக்கங்களைப் பெற்றுள்ளனர்.