You are currently viewing DAILY CURRENT AFFAIRS FEB 13,2021 | TNPSC | RRB | TNUSRB | SSC |

DAILY CURRENT AFFAIRS FEB 13,2021 | TNPSC | RRB | TNUSRB | SSC |

1. உலக பாரா தடகளம்  இந்தியாவுக்கு 5 பதக்கம்: உலக தடகள கிராண்ட் ப்ரீ போட்டியின் 2-வது நாளில் இந்தியாவுக்கு 2 தங்கம் உட்பட 5 பதக்கங்கள் கிடைத்துள்ளன. உலக பாரா தடகள கிராண்ட் ப்ரி போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இரண்டாவது நாளில் மகளிர் 100 மீட்டர் டி13 இறுதிச் சுற்றில் இந்தியாவின் சிம்ரன் 12.74 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றார்.ஆடவர் வட்டு எறிதலில் F55 போட்டியில் இந்தியாவின் நீரச் யாதவ்  தங்கம் வென்றார்.

2.  குப்பை குறித்து புகார் அளிக்க “சிட்டிசன்” செயலி அறிமுகம்: சென்னையில் குப்பை குறித்து புகார் அளிக்க சிட்டிசன் செயலி  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் 16 மண்டலங்களில் குப்பை அள்ளும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. அதில் உர்பசர் சுமித் நிறுவனம் தேனாம்பேட்டை, கோடம்பாக்கம்,  வளசரவாக்கம்,  ஆலந்தூர்,  அடையாறு,  பெருங்குடி,  சோழிங்கநல்லூர் ஆகிய 7 பகுதிகளில் குப்பை அள்ளும் பணியை செய்து வருகிறது.இந்த மண்டலங்களில் சாலையில் கிடக்கும் குப்பை குறித்து புகார் அளிக்க சிட்டிசன் செயலியை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் அறிமுகப்படுத்தினார்.

3.  100 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வரும் அன்னபூரணி சிலை: கனடாவில் உள்ள ரெஜினா பல்கலைக்கழகத்தின் மெக்கன்சி கலைக்கூடத்தில் இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்டு  இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட பெண் கடவுளின் சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது.  அச்சிலை வாரணாசி ராணியும் உணவு கடவுளான அன்னபூரணி என கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அச்சிலையை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்க ரெஜினா பல்கலைக்கழகம் முன்வந்துள்ளது. இச்சிலையை இந்தியா  கொண்டுவரும் நடைமுறைகளை கலாச்சாரத்துறை விரைவுபடுத்தி வருகிறது.

4.  ஆட்டோ டிரைவர் மகள் அழகி போட்டியில் வெற்றி: பெமினா  இதழ்  நடத்திய இந்திய அழகிப் போட்டியில் உத்தர பிரதேசத்தை  சேர்ந்த மான்யா என்பவர் இரண்டாமிடம் பெற்றுள்ளார்.

 

5.  ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பு(Great Backyard  Bird Count-GBBC), வளாக பறவைகள் கணக்கெடுப்பு(Cambus Bird Count-GBC)இந்த இரண்டு நிகழ்வுகளும் இந்தாண்டு பிப்ரவரி 12-15 ஆகிய நான்கு நாட்கள் நடைபெறுகின்றன.

DAILY CURRENT AFFAIRS FEB 13,2021 TNPSC RRB TNUSRB SSC