1. மொழி சிறுபான்மையினருக்கான சமூக பொருளாதார மேம்பாட்டு கழகம் உருவாக்கம்- தமிழக அரசு உத்தரவு: தமிழகத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது மற்றும் சௌராஷ்டிர மொழிகளைப் பேசும் மக்கள் அதிகம் வசிக்கின்றனர். அவர்களின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் அம்சமாக மொழி சிறுபான்மையினருக்கான சமூக பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தை உருவாக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் தலைவரை அரசு நியமனம் செய்யும் இந்தக் கழகமானது 16 பேரை கொண்டு இயங்கும். இதன் இயக்குனராக சிறுபான்மை நலத்துறை இயக்குனர் பொறுப்பேற்பார்.
2. உலக பாரா தடகளம் இந்தியாவுக்கு 2 தங்கம்: துபாயில் நடைபெற்று வரும் சர்வதேச தடகள கிராண்ட் ப்ரீ போட்டியின் முதல் நாளில் இந்தியாவுக்கு 2 தங்கம் உட்பட 6 தங்கங்கள் கிடைத்துள்ளன.
இதில் ஆடவருக்கான வட்டு எறிதல் (F44) பிரிவில் இந்தியாவின் தேவேந்திர குமார் தனது இரண்டாவது முயற்சியில் 50.61 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். அதே பிரிவில் மற்றொரு இந்தியரான பிரதீப் 41.77 மீட்டர் தூரம் எறிந்து இரண்டாமிடம் பிடித்தார். மகளிருக்கான நீளம் தாண்டுதலில்(F46/47) இந்தியாவின் நிமிஷா சுரேஷ் 5.25 மீட்டர் தூரம் கடந்து தங்கத்தை தனதாக்கினார் சர்வதேச போட்டியில் தேவேந்திரகுமார் மற்றும் நிஷாவுக்கு இது முதல் தங்கமாகும்.