1.துறைமுகங்கள் அதிகார மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது: நாட்டில் உள்ள 12 முக்கிய துறைமுகங்களின் நிர்வாகத்தை மேம்படுத்தும் நோக்கில் அவற்றுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குவதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மசோதாவிற்கு மக்களவையில் கடந்த ஆண்டு (2020)செப்டம்பர் மாதம் ஒப்புதல் வழங்கியது மாநிலங்களவையில் இந்த மசோதா பிப்ரவரி 10, 2021ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
2. டிரம்ப் பதவி நீக்க விசாரணை செனட் சபை ஒப்புதல்:
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது பதவி நீக்க விசாரணைகளை முன்னெடுத்து செல்ல நாடாளுமன்ற மேலவையான செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
3.இதுவரை 33 நாடுகளில் இருந்து 328 செயற்கைக்கோள்களை இந்தியா ஏவியுள்ளது.
இந்தியா இதுவரை 33 நாடுகளில் இருந்து 328 செயற்கைக்கோள்களை ஏவியுள்ளதாக மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளி துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.
4. அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்துடன் இந்திய பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் ஒப்பந்தம் செய்துள்ளது.
5. சென்னை சர்வதேச திரைப்பட விழா பிப்ரவரி 18-ஆம் தேதி தொடக்கம்
53 நாடுகளில் இருந்து 96 திரைப்படங்கள் பங்கேற்கிறது.
6. பிப்ரவரி 11: உலக நோயாளர் நாள்