1. தமிழகம் முழுவதும் கொத்தடிமை முறை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டது
கொத்தடிமை தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்றிட தமிழகத்தை கொத்தடிமைத் தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக உருவாக்கிட ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 9ஆம் தேதி கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் அனுசரிக்க கடந்த ஆண்டு 2020 செப்டம்பர் 23ஆம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி இந்த ஆண்டு முதல் முறையாக கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் அனைத்து மாவட்டங்களிலும் அனுசரிக்கப்பட்டது.
2. ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு அமெரிக்க பல்கலைக்கழகம் கௌரவம்:
உலகில் சமாதானம், மனிதநேயம், மதநல்லிணக்கம் வளர்வதற்காக பாடுபட்டு வரும் இந்திய ஆன்மீகத் தலைவர்
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அமெரிக்க பல்கலைக் கழகத்தால் சர்வதேச குடியுரிமை தூதராக அங்கீகரிக்கப்பட்டு உள்ளார்.
3. தமிழகம் முழுவதும் சைபர் குற்றங்களை தடுப்பதற்காக தனி காவல் நிலையம் :
சைபர் குற்றங்களைக் கண்டறிந்து விரைந்து நடவடிக்கை எடுப்பதற்காக தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தனி காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இவை அனைத்தும் பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
4.வாரியார் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்: கிருபானந்தவாரியாரின் பிறந்த தினமான ஆகஸ்ட் 25ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.