1. ராஜஸ்தானில் இந்திய அமெரிக்க கூட்டு ராணுவ பயிற்சி தொடக்கம்:
ராஜஸ்தான் மாநில மேற்கு பகுதியில் உள்ள மகாஜன் துப்பாக்கி சுடும் தளத்தில் 16ஆவது இந்திய அமெரிக்க கூட்டு ராணுவ பயிற்சி யூத் அபியாஸ் பிப்ரவரி 8ஆம் தேதி தொடங்கியது
2. ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகமாக அறிவிப்பு
மேகமலை வன உயிரின சரணாலயம், ஸ்ரீவில்லிபுத்தூர் சாம்பல் அணில்கள் சரணாலயம் ஆகியவற்றை இணைத்து தமிழகத்தின் ஐந்தாவது புலிகள் காப்பகமாக ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகத்தை அரசு அறிவித்துள்ளது.
3. ஆண்டின் சிறந்த வீராங்கனை: பிபிசி வழங்கும் ஆண்டின் சிறந்த இந்திய வீராங்கனை விருதுக்காக மகளிர் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால், செஸ் வீராங்கனை கொனெரு ஹம்பி, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மானு பேக்கர், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன
4. இந்தியாவை சேர்ந்த கல்வி நுட்ப நிறுவனமான பைஜூஸ் ஐசிசி போட்டிகளுக்கான விளம்பரதாரராக 2021 முதல் 2023 வரையிலான காலகட்டத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளது.