1. பிப்ரவரி 28-இல் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-51
உள்நாடு மற்றும் வெளிநாடுகளின் 21 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் வரும் 28ஆம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஆராய்ச்சி மையத்தில் இருந்து செலுத்தப்பட இருக்கிறது. பிரேசில் நாட்டின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் அதில் முக்கியமாக இடம் பெற்றுள்ளது.
பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட்டின் பிரதான செயற்கைக் கோளாக பிரேசில் நாட்டை சேர்ந்த அமேசானியா-01 என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது. பிரேசில் நாட்டின் அமேசான் பிராந்தியத்தை கண்காணிக்கும் பயன்பாட்டுக்காக அது அனுப்பப்பட இருக்கிறது.
2. செல்லிடப்பேசி மூலம் எண் 1100 க்கு புகார் மனு அளிக்க ஏற்பாடு:
பொதுமக்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்தே பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணும் வகையில் செல்லிடப்பேசி மூலம் புகார் அளிப்பதற்காக 1100 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளும் வகையில் தலைமை செயலகத்தில் விரைவில் உதவி மையம் தொடங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.