You are currently viewing DAILY CURRENT AFFAIRS FEB 07,2021 | TNPSC | RRB | TNUSRB | SSC |

DAILY CURRENT AFFAIRS FEB 07,2021 | TNPSC | RRB | TNUSRB | SSC |

1.  சிஆர்பிஎஃப் கோப்ரா படைப்பிரிவில் பெண்கள்: மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கோப்ரா என்ற பிரிவில் முதன்முறையாக பெண்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்

2. கரோனோ ஊரடங்கு காலத்தில் அதிகளவு கருக்கலைப்பு நடந்த மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்திலும் தமிழகம் இரண்டாவது இடத்திலும் உள்ளது.குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையில் கருத்தடை சிகிச்சையில்  முதலிடத்தை தமிழகம் பெற்றுள்ளது கர்நாடக இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.

3.ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் சரணாலயமாக மாற்றம்:  தற்போது தமிழகத்தின் ஐந்தாம் புலிகள் சரணாலயமாகவும் இந்தியாவின் 51 வது புலிகள் சரணாலயமாகவும்  ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை சரணாலயம்  தேர்வு செய்யப்பட்டுள்ளன.

கடைசியாக ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அருணாச்சல பிரதேசத்தின் காம்லாங் பகுதி புலிகள் சரணாலயமாக அங்கீகரிக்கப்பட்டது.

4.  மடிக்கேரியில் ஜெனரல் திம்மையா அருங்காட்சியகம்: 

 

மடிக்கேரியில் ஜெனரல் திம்மையா அருங்காட்சியகத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.1957 முதல் 1961 ஆண்டு வரையில் இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியாக கே.எஸ் திம்மையாஇருந்தார். இவரது சொந்த ஊரான குடகு மாவட்டம் மடிக்கேரியில் அமைந்துள்ள அவரது பூர்வீக இல்லம் புதுப்பிக்கப்பட்டு அருங்காட்சியமாக மாற்றப்பட்டுள்ளது. 

DAILY CURRENT AFFAIRS FEB 07,2021 TNPSC RRB TNUSRB SSC