1. இடி, மின்னலை ஆய்வு செய்யும் ஆராய்ச்சி நிலையம்
ஒடிசாவின் பாலாசோறில் அமைகிறது.
நாட்டிலேயே
முதல் முறையாக இடி, மின்னலை ஆய்வு செய்யும் ஆராய்ச்சி நிலையம் ஒடிசா மாநிலம் பாலாசோறில்
அமைகிறது.
இந்தியாவின்
சூறாவளி மனிதர் என அழைக்கப்படுபவர் மிருத்யுஞ்ஜய் மொஹபத்ரா.
2. பிஎஸ்எல்வி
சி-51 ராக்கெட் பிப்ரவரி 28-இல் விண்ணில் பாய்கிறது
இந்த
ராக்கெட்டில் 21 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட உள்ளன.பிரேசில் நாட்டில் அமேசானியா-1
உட்பட 21 செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் மூலம் வரும் 28ஆம் தேதி விண்ணில்
செலுத்தப்பட உள்ளன.ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட்
செலுத்தப்பட இருக்கிறது.முதன்மை செயற்கைக்கோளான அமேசானியா 700 கிலோ எடை கொண்டது.இது
பிரேசிலின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது.புவி ஆய்வு மற்றும் அமேசான் காடுகளை கண்காணிப்பது இதன்
முக்கிய பணியாகும். இதுதவிர இஸ்ரோ தயாரித்த “ஐஎன்எக்ஸ்”, இந்திய தனியார் நிறுவனங்களான பிக்சல் ஸ்டார்ட் அப்
மையத்தின் “ஆனந்த்”, ஸ்பேஸ் கிட்ஸ்
இந்தியா அமைப்பின் “சதிஷ்சாட்”,
சென்னை ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி, நாக்பூர் ஜி.எச் ரைசோனி பொறியல் கல்லூரி, கோயம்புத்தூர் ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரி தொழில்நுட்பக்
கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்பில் தயாரிக்கப்பட்ட யூனிட்டிசாட் ஆகியவை
இதன் முக்கிய செயற்கைக்கோள்கள் ஆகும்.
3. ரோமன்
ரோலண்ட் பரிசு: பிரெஞ்சிலிருந்து முக்கியமான இலக்கிய ஆக்கங்களை
நேரடியாக தமிழுக்கு மொழிபெயர்த்து வரும் பாண்டிச்சேரி பேராசிரியர் வெங்கட சுப்புராய
நாயகருக்கு ரோமன் ரோலண்ட் பரிசு வழங்கி கௌரவித்து இருக்கிறது பிரெஞ்சு அரசாங்கம்.தாஹர்
பென் ஜலுனின் “உல்லாச திருமணம்” நாவல் மொழிபெயர்ப்புக்காக இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது.
4.விழுப்புரத்தில்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் தொடங்கப்பட இருக்கிறது
5.வரும்
நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி 10.5 சதவீதமாக உயரும் என இந்திய ரிசர்வ் வங்கி கணித்துள்ளது:
வரும்
நிதியாண்டில் 2021-2022 இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி ஜிடிபி 10.5 சதவீத
அளவுக்கு இருக்கும் என ரிசர்வ் வங்கி கணிப்பு வெளியிட்டுள்ளது.முடிவடையும் நிதியாண்டில்
(2020-2021)இந்தியாவின் வளர்ச்சி விகிதம் -7 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது
6. தமிழகத்தின் ஏற்றுமதி திறனை பயன்படுத்த அபேடா அலுவலகம் சென்னையில் திறப்பு: மத்திய அரசின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட
பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் மண்டல அலுவலகம் சென்னையில் திறக்கப்பட்டு
உள்ளது.
7. தென் மாவட்டத்தில் முதல் முறையாக மண்டல புற்றுநோய்
மையம் :
தென்
மாவட்டமான திருநெல்வேலியில் முதன்முறையாக மண்டல புற்றுநோய் மையம் திறக்கப்பட்டுள்ளது.
8. கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்துக்கு பாஷ்யம் கட்டிட
நிறுவனத்தின் பெயர்.
தமிழகத்தில் மெட்ரோ ரயில் நிலையங்களில் அது அமைந்துள்ள
இடத்தை பொறுத்து பெயர் சூட்டப்படுகிறது. இதில் சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம்
அறிஞர் அண்ணா மெட்ரோ ரயில் நிலையம் எனவும், சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் புரட்சித்தலைவர்
எம்ஜிஆர் மெட்ரோ ரயில் நிலையம் எனவும், கோயம்பேடு
புறநகர் மெட்ரோ நிலையம் ஜெயலலிதா மெட்ரோ நிலையம் எனவும் கடந்த வருடம் தமிழக அரசு பெயர்
மாற்றம் செய்தது. இந்நிலையில் கோயம்பேடு மெட்ரோ நிலையத்தின் பெயரை பாஷ்யம் கோயம்பேடு
மெட்ரோ என பெயர் மாற்றப்பட்டு எழுதப்பட்டிருக்கிறது.
