1. சீரம் நிறுவனத்துடன் ஒப்பந்தம்
புனேவை சேர்ந்த சீரம் நிறுவனத்திடம் 110 கோடி கரோன தடுப்பூசி வாங்க ஐக்கிய நாடுகள் சபை யூனிசெப் ஒப்பந்தம் செய்துள்ளன. இதன்படி கரோனா தடுப்பூசி கோவிஷீல்டு தயாரித்து சீரம் நிறுவனம் அளிக்க உள்ளது.
2. ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை- சட்ட மசோதா தாக்கல்: இணைய வழியில் நடைபெறும் சட்டங்களுக்கு தடை விதிக்கும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
3. சவுரி சவுரா நூற்றாண்டு விழா தொடக்கம் : சுதந்திரப் போராட்ட காலத்தில் 1922ஆம் ஆண்டில் ஒத்துழையாமை போராட்டம் நடந்தது.பிப்ரவரி 4-ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டம் சௌரி சௌரா என்ற இடத்தில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் சிலர் உயிரிழந்தனர். இதனால் ஆத்திரமடைந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அப்பகுதியில் இருந்த காவல் நிலையத்திற்கு தீ வைத்தனர் இதில் சிலர் கொல்லப்பட்டனர். சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முக்கிய நிகழ்வாக கருதப்படும் சௌரி சௌரா சம்பவத்தின் நூற்றாண்டு விழா கோரக்பூரில் பிப்ரவரி 4-ஆம் தேதி தொடங்கப்பட்டது.
4. சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் தற்போது பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ நிலையம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
5. பிப்ரவரி 20 ல் பிரதமர் தலைமையில் நிதி ஆயோக் நிர்வாக கவுன்சில் கூட்டம் நடைபெற இருக்கிறது. நிதி ஆயோக் நிர்வாக கவுன்சில் கூட்டம் முதல் முறையாக கடந்த 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. நிதி ஆயோக் அமைப்பின் தலைவராக பிரதமர் பதவி வகிப்பார். அவர் தலைமையில் அந்த அமைப்பின் நிர்வாகக் கவுன்சில் கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், மூத்த அரசு அதிகாரிகள் பங்கேற்பர்