1. பிப்ரவரி 8 முதல் இந்திய அமெரிக்க கூட்டு ராணுவ பயிற்சி தொடக்கம்:
இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து மேற்கொள்ளும் கூட்டு ராணுவ பயிற்சி வரும் 8ஆம் தேதி ராஜஸ்தானில் தொடங்கப்பட இருக்கிறது அமெரிக்க வீரர்களுடன் இந்திய வீரர்கள் இணைந்து மேற்கொள்ளவிருக்கும் கூட்டு ராணுவ பயிற்சி ராஜஸ்தானில் பிப்ரவரி 8 முதல் பிப்ரவரி 21 வரை நடைபெற உள்ளது.16 வது ஆண்டாக நடைபெறும் இந்த வருடாந்திர கூட்டு ராணுவப் பயிற்சியில் பங்கேற்பதற்காக அமெரிக்க வீரர்கள் இந்தியா வந்துள்ளனர். இந்தியா சார்பில் ஜம்மு-காஷ்மீர் ரைபிள்சின் 11 ஆவது படைப்பிரிவு இந்த பயிற்சியில் பங்கேற்கிறது.
2. குடிநீர் வழங்க டேங்க்மீ செயலி அறிமுகம்: சென்னை மக்களுக்கு தேவையான குடிநீர் வழங்க டேங்க் மீ செயலியை 3 எம்பிஏ மாணவர்கள் சேர்ந்து உருவாக்கியுள்ளனர்.
3. நாட்டின் மிக இளம் வயது பெண் விமானி பெருமை பெற்றார் காஷ்மீரின் ஆயிஷா: நாட்டில் மிகவும் இளம் வயதில் விமானியான பெண் என்ற பெருமையை காஷ்மீரை சேர்ந்த 25 வயது ஆயிஷா அஜீஸ் பெற்றுள்ளார்.
4. இந்திய குத்துச்சண்டை சம்மேளன தலைவராக அஜய் சிங் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
5. தோழி திட்டம்:பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் முகத்தில் புன்னகையை கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டது தோழி திட்டமாகும். பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் நலன் காக்க அவர்கள் வசிக்கும் இடம் தேடி நேரடியாக சென்று மன ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் உதவி மற்றும் ஆலோசனைகள் வழங்க சென்னை காவல் துறையில் `தோழி´ என்ற தனிப் பிரிவு உருவாக்கப்பட்டது பட்டுள்ளது.
6. பிப்ரவரி 4 : உலகப் புற்றுநோய் தினம்