1. 2020 ஆம் ஆண்டின் சிறந்த ஆக்ஸ்போர்டு இந்தி வார்த்தையாக ஆத்ம நிர்பார் தேர்வு:
கரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சனைகளை சமாளிக்க பிரதமர் மோடி ஆத்ம நிர்பார் பாரத் (தற்சார்பு இந்தியா) என்னும் திட்டத்தை அறிமுகம் செய்தார். உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்படுவதாக அவர் அறிவித்தார். இதைத்தொடர்ந்து ஆத்ம நிர்பார் என்ற வார்த்தை நாட்டு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக ஒன்றாக மாறியது இந்தியாவில் பலரும் அந்த வார்த்தையை பரவலாகப் பயன்படுத்த தொடங்கிவிட்டனர் இதனால் 2020 ஆம் ஆண்டுக்கான இந்தி வார்த்தையாக ஆத்ம நிர்பார் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இதற்கு முன்பு ஆதார் (2017) நாரி சக்தி (2018) சம்விதான் (2019) ஆகிய ஹிந்தி வார்த்தைகள் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள மொழிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
2. பசுமை பூமி பிரசித்திக்கு விருது
சென்னை சேர்ந்த பிரசித்தி சிங் ஏராளமான பழ மரங்களையும் பழகாடுகளையும் உருவாக்கி வருகிறார்.பிரசித்தி வன அறக்கட்டளை ஒன்றையும் உருவாக்கி உள்ளார். பிரதம மந்திரியின் “தேசிய பாலர்” விருது இவருக்கு கிடைத்திருக்கிறது.
3. நாசாவின் முக்கிய பொறுப்பில் இந்திய-அமெரிக்கர்: அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் இடைக்கால தலைமை பணிக்குழு ஒருங்கிணைப்பு அதிகாரியாக இந்திய வம்சாவளி விஞ்ஞானி பவ்யா லால் நியமிக்கப்பட்டுள்ளார்.
4. கேரளத்தின் முதல் தாய்ப்பால் வங்கி பிப்ரவரி 5ல் தொடங்கப்பட இருக்கிறது கேரளத்தின் முதல் தாய்ப்பால் வங்கி எர்ணாகுளம் பொது மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் பிப்ரவரி 5ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.
5.பிப்ரவரி 8 முதல் கோவை மாவட்டத்தில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
6. மாதத்தின் சிறந்த வீரர் விருதுகள்
ஐசிசி புதிதாக அறிவித்துள்ள மாதத்தின் சிறந்த வீரர் விருது இந்தியாவின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் மற்றும் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் மற்றும் அயர்லாந்து பேட்ஸ்மேன் பால் ஸ்டிர்லிங் ஆகியோருக்கு வழங்கப்பட இருக்கிறது.மகளிர் பிரிவில் மாதத்தின் சிறந்த வீராங்கனை விருதுக்கு பாகிஸ்தானின் டயானா பெய்க் தென்னாப்பிரிக்காவின் ஷப்னம் இஸ்மாயில், மாரிசானே காப் ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.