1. காணாமல்
போன குழந்தையை மீட்க “ஆபரேசன் ஸ்மைல்” திட்டம்
சென்னை
பெருநகரில் சாலையோரம் சுற்றித்திரியும் குழந்தைகள், காணாமல் போன குழந்தைகள், கடத்தப்பட்ட
குழந்தைகள், பாதுகாப்பும் பராமரிப்பும் தேவைப்படும் குழந்தைகளுக்கு உதவும் வகையில்
“ஆபரேசன் ஸ்மைல்” என்ற திட்டத்தை சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்
தொடங்கிவைத்தார்.
2. இலவச தரவு அட்டை திட்டம் தொடக்கம்:
இணைய
வழி வகுப்புகளில் பங்கேற்க ஏதுவாக தமிழகத்தில்
கல்லூரி மாணவ மாணவிகள் கிட்டத்தட்ட 9.69 லட்சம் பேருக்கு தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கும் வகையில் இலவச அட்டை வழங்கும்
திட்டத்தை தமிழக முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
3. தமிழக அரசின் 47வது தலைமை செயலாளராக ராஜீவ் ரஞ்சன்
பொறுப்பேற்பு:
தமிழக
அரசின் 47வது தலைமை செயலாளராக ராஜீவ் ரஞ்சன் பொறுப்பேற்றுக்கொண்டார் தமிழக அரசின் 46
வது தலைமைச் செயலாளராக சண்முகம் 2019 ஜூலை 1 ஆம் தேதி பதவியேற்றார்.
தமிழகத்தின்
புதிய தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் 1985ஆம் ஆண்டு இந்திய
ஆட்சிப் பணியில் சேர்ந்தார்.
4. மியான்மரில் மீண்டும் ராணுவ ஆட்சி
மியான்மரில்
கடந்த 1962-ஆம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடந்து வந்தது இதனை எதிர்த்து தேசிய ஜனநாயக
கட்சியின் தலைவர் ஆங் சான் சூகி போராடினார்.இதன் காரணமாக அவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக
வீட்டு சிறையில் வைக்கப்பட்டார்.மக்களின் தொடர் போராட்டம் காரணமாக கடந்த 2015ஆம் ஆண்டு
மியான்மரில் பொதுத்தேர்தல் நடைபெற்றது இந்த தேர்தலில் ஆங் சாங் சூகியின் தேசிய ஜனநாயக
கட்சி வெற்றி பெற்றது.
வெளிநாட்டு குடியுரிமை பெற்றதன் காரணமாக அவர் அதிபராக
பதவி ஏற்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து அவருக்கு நெருக்கமான டின் கியாவ் அதிபராக
பதவி ஏற்றார். அரசின் தலைமை ஆலோசகராக ஆங் சாங் சூகி பொறுப்பேற்றுக்கொண்டார் இந்நிலையில்
ஒருநாள் நோய்த்தொற்று அச்சுறுத்தல்களுக்கு இடையே கடந்த நவம்பர் மாதம் அதாவது 2020 நவம்பரில்
மியான்மரில் பொதுத்தேர்தல் நடைபெற்றது அந்தத் தேர்தலிலும் ஆங் சாங் சூகியின் ஆதரவு
பெற்ற தேசிய ஜனநாயக கட்சி 476 இடங்களில் 396 இடங்களை கைப்பற்றியது.இந்த தேர்தலில் முறைகேடு
நடந்துள்ளதாக கூறி மீண்டும் ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்டு மியான்மரில் இராணுவ ஆட்சி ஒரு வருடத்திற்கு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
4. தமிழக
அரசின் சித்திரை தமிழ்ப் புத்தாண்டு விருதுகள்
சிங்காரவேலர்
விருது- அழகேசன்
மறைமலையடிகள்
விருது -தாயுமானவன்
அயோத்திதாச
பண்டிதர் விருது – செல்லம்மாள் அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் விருது -ஊரன் அடிகள் காரைக்காலம்மையார்
விருது -ஞான பூங்கோதை
5. தமிழக அரசின் திருவள்ளுவர் திருநாள் விருதுகள்
திருவள்ளுவர்
விருது – வைகை செல்வன்
பேரறிஞர்
அண்ணா விருது -கடம்பூர் ஜனார்த்தனன் பெருந்தலைவர்
காமராசர் விருது -தேவராஜ்
மகாகவி
பாரதியார் விருது- பூவை செங்குட்டுவன் பாவேந்தர் பாரதிதாசன் விருது- அறிவுமதி
தமிழ்
தென்றல் திரு வி க விருது – வி என் சாமி
கி.ஆ.பெ
விசுவநாதம் விருது – சேது ராமலிங்கம்
கபிலர்
விருது- ஏழுமலை உவேசா விருது- ராஜநாராயணன்
கம்பர்
விருது -ஹண்டே சொல்லின் செல்வர் விருது -நாகை முகுந்தன் உமறுப்புலவர் விருது- சையத்
அசன் என்கிற பாரிதாசன்
ஜி
யு போப் விருது-ஜெர்மனி நாட்டின் உல்ரிகே நிகோலஸ் இளங்கோவடிகள் விருது- வைத்தியலிங்கன்
அம்மா
இலக்கிய விருது -மகாலட்சுமி
2020 ஆம் ஆண்டிற்கான அண்ணல் அம்பேத்கர் விருது- வரகூர்
அருணாசலம்
6.
2021-22 ஆம் ஆண்டின் பட்ஜெட் சிறப்பம்சங்கள்
இடம்
பெற்ற திருக்குறள்
இயற்றலும்
ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும்
வல்ல தரசு
1.
கரோனா பரவலைத் தடுக்க ஜிடிபியில் 13 சதவீதம் நிதி ஒதுக்கீடு
2.
வருமான வரி விகிதங்கள் மற்றும் கார்ப்பரேட் வரிகள் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை
3. 75 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டியதில்லை
4.
பங்குச்சந்தை ஒழுங்குபடுத்த புதிய சட்டம்
5.
ரூபாய் 1.41 லட்சம் கோடி மதிப்பீட்டில் நகர்புற தூய்மை இந்தியா திட்டம்
6.
ரூபாய் 64, 180 கோடியில் பிரதமரின் சுயசார்பு ஆரோக்கிய திட்டம்
7.
இந்தியாவில் உலக சுகாதார அமைப்பின் கிளை தொடங்க திட்டம்
8.
சுகாதாரத் துறைக்கு கடந்த ஆண்டை விட கூடுதலாக 137% சதவீதம் நிதி
9. பாதுகாப்பு துறைக்கு 4.78 லட்சம் கோடி இது கடந்தாண்டை
விட 7,000 கோடி அதிகம்
10. தேசிய ரயில் திட்டம்-2030 தொழில்நுட்ப வளர்ச்சிகளை
முழுமையாக பயன்படுத்தி எதிர்காலத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் மேம்பட்ட
ரயில் சேவை வழங்க நாடு முழுவதுக்குமான தேசிய ரயில் திட்டம்-2030 என்ற புதிய கொள்கை
உருவாக்கப்பட்டுள்ளது.
