1. தமிழக
அரசில் 47வது தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் பொறுப்பேற்பு.
இவர்
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு
முன்பு தலைமைச் செயலாளராக பணியாற்றிய க.சண்முகம் தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2. கொரோனா தொற்று முதல் பருவ நிலை மாற்றம் வரை உலகின்
பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் நாடாக இந்தியா உள்ளதாக பிரதமர் மோடி, கடந்த 1896ம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் தொடங்கிய
“பிரபுத்த பாரத” மாத இதழின் 125ஆம் ஆண்டு கொண்டாட்டத்தின்போது தெரிவித்தார்.
3. அனைத்து கிரிப்டோகரன்சிகளுக்கும் தடை
பிட்காயின்
உள்ளிட்ட கிரிப்டோகரன்சிகளுக்கு தடைவிதிக்க தேவையான சட்டத்தை இயற்ற மத்திய அரசு முடிவு
செய்துள்ளது.
4. ஜிஎஸ்டி வசூல் சாதனை:
ஜனவரி
2021 ல் ஜிஎஸ்டி ரூபாய் 1.20 லட்சம் கோடி வசூல் செய்துள்ளது. இந்த ஜிஎஸ்டி வருவாய் டிசம்பர் 2020 இல் வசூலான மதிப்பைவிட அதிகமாகும்.மேலும்
ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இதுவரை இல்லாத அளவு
இது அதிகமாகும்.
5. தினமணிக்கு சி. பா. ஆதித்தனார் விருது:
நாகரீகம்,
பண்பாடு ஆகியவற்றைப் பற்றியும் பிற மொழி கலப்பின்றி எழுதியும் தமிழ் மொழியில் வெளியிடப்பட்டு
வரும் நாளிதழ், வார இதழ் மற்றும் திங்களிதழ் ஆகியவற்றில் ஒவ்வொன்றிலும் ஓர் இதழை தெரிவுசெய்து
தமிழர் தந்தை ஆதித்தனார் பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது. 2020 ஆம் ஆண்டுக்கான
தமிழர் தந்தை சி.பா ஆதித்தனார் நாளிதழ் விருது தினமணிக்கு வழங்கப்படுகிறது. சி.பா.ஆதித்தனார்
வார இதழ் விருது கல்கி வார இதழுக்கும், சி
பா ஆதித்தனார் திங்களிதழ் விருது செந்தமிழ் திங்கள் இதழுக்கும் தேவநேயப்பாவணர் விருது
முனைவர் கு.சிவமணிக்கும் வீரமாமுனிவர் விருது ஹாங்காங்கை சேர்ந்த முனைவர் கிரிகோரி
ஜேம்ஸ் க்கும் வழங்கப்படுகிறது
2020
ஆம் ஆண்டுக்கான இலக்கிய விருது பிரான்ஸ் நாட்டை சேர்ந்த முனைவர் அலெக்சிஸ் தேவராசு
சேன்மார்க் என்பவருக்கும், இலக்கண விருது இலங்கையைச்
சேர்ந்த பேராசிரியர் அருணாசலம் சண்முகதாஸ் என்பவருக்கும் மொழியியல் விருது சிங்கப்பூரை
சேர்ந்த முனைவர் சுப.திண்ணப்பன் என்பவருக்கும் வழங்கப்படுகிறது.
2019
ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருது சே.ராஜாராமன் பெறுகிறார்.
6.நாடாளுமன்றத்தில்
மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்
சிறப்பம்சங்கள்
1.
நாடு சுதந்திரம் பெற்ற பிறகு முதல் முறையாக காகிதமில்லா டிஜிட்டல் பட்ஜெட் அறிமுகப்படுத்தப்பட
இருக்கின்றது
2.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசானது இடைக்கால பட்ஜெட் உடன் சேர்த்து தாக்கல் செய்யும்
ஒன்பதாவது பட்ஜெட் இது.
3. நாட்டின் இரண்டாவது பெண் நிதி அமைச்சர் நிர்மலா
சீதாராமன் தாக்கல் செய்யும் மூன்றாவது பட்ஜெட்.
7. சையது
முஷ்டாக் அலி டி-20
தமிழகம்
சாம்பியன்
சையது
முஷ்டாக் லீக் டி20 தமிழகம் வெற்றி பெறுவது இது இரண்டாவது முறையாகும் இதற்கு முன்னதாக
2006-07 காலகட்டத்தில் தமிழகம் கோப்பையை வென்று இருக்கிறது.
8.
உலக டூர் பைனல்ஸ் பேட்மிடன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் டென்மார்க் வீரர்
ஆண்டர்ஸ் ஆண்டன்சன் சக வீரர் விக்டர் ஆக்சல்சனை
வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.
9. உலக
டூர் பைனல்ஸ் பேட்மிட்டன் டாய் ட்ஸு யிங் சாம்பியன்
உலக
டூர் பைனல்ஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் தைவான் வீராங்கனை டாய் ட்ஸு யிங் சாம்பியன்
பட்டம் வென்றார்.
